மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது மலேசியாவில் தாக்குதல் !

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது புலம்பெயர் விடுதலை புலி ஆதரவாளர்கள் குழு தாக்குதல்  நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தலவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மடவளை நியுஸ் தற்போது முன்னாள் ஜனாதிபதியிடன் மலேசியா சென்றுள்ள குருநாகல் மாவட்ட சுதந்திரகட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் அவர்களை அவர்களை தொடர்புகொண்டு கேட்ட போது உயர் ஸ்தாணிகர் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

இன்று நாடு திரும்பிய அமைச்சர் தயா கமகே மற்றும் கூட்டு எதிர்கட்சி பாராலுமன்ற உறுப்பினர் தினேஸ் குனவர்தன அவர்களுடன் விமான நிலையம் சென்று அவர் திரும்பும் போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவ்த் தற்போது விமான நிலைய வைத்தியசாலையில் சிகிற்ச்சை பெறுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக சவுதி அரேபியா எகிப்து உள்ளிட்ட பல நாடுகளின் உயர்ஸ்தானிகராக இருந்த இவர் அரசியல் நியமனம் மூலம் உயர்பதவிக்கு வந்த ஒருவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது .


மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது மலேசியாவில் தாக்குதல் ! மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது மலேசியாவில் தாக்குதல் ! Reviewed by Madawala News on 9/04/2016 03:43:00 PM Rating: 5