( CCTV வீடியோ இணைப்பு ) ஒரு தலைக்காதல் விபரீதம். இளம்பெண்னை சரமாரியாக குத்திக் கொன்ற இளைஞன்.



இந்தியா:
டெல்லி பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் தடுத்தி நிறுத்தி சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் சென்று கொண்டிருந்த பலரும் இந்த சம்பவத்தை நின்று வேடிக்கை பார்த்த போதும், குறித்த பெண்ணை காப்பாற்ற எவரும் முன்வரவில்லை.

முகம், தாடை என்று பல்வேறு இடங்களில் சுமார் 22 முறை கத்தியால் குத்துப்பட்ட அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த பெண்ணின் முன்னாள் காதலரான சுரேந்திர சிங் என்பவரே இந்த கொலையினை செய்துள்ளதாகவும், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஒரு வருடமாக இப்பெண்னை சுரேந்திர சிங் தொல்லை கொடுத்து வந்துள்ளதாகவும், இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டு இரு வீட்டாரிடமும் சுமூகமாக பேச்சு வார்த்தை செய்து அனுப்பி வைத்ததாகவும் கூறினார்.

எனினும், இன்று காலை அப்பெண்னை சந்தேகநபர் பின்தொடர்ந்து, மடக்கி பிடித்து சரமாரியாக கண்மூடித்தனமாக குத்தி படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் அப்பெண்ணுக்கு 22 முறை கத்தி குத்து விழுந்துள்ளது என்றும், சுரேந்திர சிங் ஏற்கனவே திருமணம் ஆனவர் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
( CCTV வீடியோ இணைப்பு ) ஒரு தலைக்காதல் விபரீதம். இளம்பெண்னை சரமாரியாக குத்திக் கொன்ற இளைஞன். ( CCTV வீடியோ இணைப்பு ) ஒரு தலைக்காதல் விபரீதம். இளம்பெண்னை சரமாரியாக குத்திக் கொன்ற  இளைஞன். Reviewed by Madawala News on 9/21/2016 06:45:00 AM Rating: 5