( CCTV வீடியோ இணைப்பு) கிரிக்கட் சங்க முன்னாள் தலைவர் சுட்டுக்கொலை செய்யப்படும் காட்சி வெளியானது.



காலி மாவட்ட கிரிக்கட் சங்க முன்னாள் தலைவர் மற்றும் பிரபல வர்த்தகருமான பிரேமசிறி ஹெலம்பகே கொலை தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து இந்த சந்தேக நபர் டி 56 ரக துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பிரேமசிறி ஹெலம்பகே கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி அம்பலாங்கொட – மானிமுல்ல பிரதேசத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

தனது மனகனுடன் ஜீப் வண்டியில் பயணித்து கொண்டிருந்த போது மோட்டார் வாகனத்தில் வந்த இரு துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பி சென்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  பிரேமசிறி ஹெலம்பகே மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்யப்பட்ட போது, பதிவான சி.சி.டி.வி காணொளி  வெளியாகியுள்ளது.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளும் இடத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
( CCTV வீடியோ இணைப்பு) கிரிக்கட் சங்க முன்னாள் தலைவர் சுட்டுக்கொலை செய்யப்படும் காட்சி வெளியானது. ( CCTV வீடியோ இணைப்பு) கிரிக்கட் சங்க முன்னாள் தலைவர் சுட்டுக்கொலை செய்யப்படும் காட்சி வெளியானது. Reviewed by Madawala News on 9/29/2016 07:58:00 PM Rating: 5