Free Space

இலங்கைக்குள் பாரியளவிலான ஒரு புதையல் கிடைத்தால் மட்டுமே 2020 இல் நாட்டின் கடன் சுமையை குறைகலாம்.



நாட்டின் கடன் சுமையை உடனடியாக குறைப்பதற்கு எந்தவொரு வாய்ப்பு வசதிகளும் இல்லையென கூட்டு எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது.

யாராவது இவ்வாறு கூறுவதாயின் அது பொய்யான வார்த்தைகளேயன்றி வேறில்லையென கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.கட்சியின்  70 ஆவது வருடாந்த மாநாட்டின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக் குறித்து கூறுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

2020 இல் நாட்டின் கடன் சுமையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

பிரதமர் கூறியவாறு நாட்டின் கடன் சுமையை 2020 இல் குறைக்க முற்படுவதாயின், நாட்டிற்குள் பாரியளவிலான ஒரு புதையல் கிடைக்க வேண்டும் எனவும் பந்துல எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.  D C
இலங்கைக்குள் பாரியளவிலான ஒரு புதையல் கிடைத்தால் மட்டுமே 2020 இல் நாட்டின் கடன் சுமையை குறைகலாம். இலங்கைக்குள் பாரியளவிலான ஒரு புதையல் கிடைத்தால் மட்டுமே 2020 இல் நாட்டின் கடன் சுமையை குறைகலாம். Reviewed by Madawala News on 9/11/2016 10:37:00 AM Rating: 5