Accaddemy

கல்ஹின்னை பதட்டத்தை தணிக்கும்முகமாக கண்டி DIG தலைமையில் விஷேட கூட்டம் !!


கல்ஹின்னை பிரதேசத்தில் ஏற்பட்ட பதட்ட நிலையை தணிக்கும் முகமாக கல்ஹின்னை மற்றும் அங்கும்புற பிரதேச மக்களுக்களுடனான  விஷேட காலந்துரையாடல் கண்டி பிரதி பொலிஸ் மாஅதிபர் ஏக்கநாயக்க அவர்களின் தலைமையில் அங்கும்புர பிரதேத்தில் இன்று காலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.


இந்த கலந்துரையாடலில் கல்ஹின்னை மற்றும் அங்கும்புர சர்வமத மதகுருமார்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் (ராஜாங்க அமைச்சர் ) வசந்த அலுவிகார , வேலு குமார் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான லாபிர் ஹாஜியார், ஹிதாயத் சத்தார், முத்தலிப் ஹாஜியார், அல்விஸ் , சானக அயிலப்பெரும உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர் ஹலீம் அவர்களின் சார்பில் அவரின் ஊடக செயளாலர் ரஸி ஹாசிம் , மக்கள் தொடர்பு அதிகாரி மஹ்மூத் மலீக் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது அங்கு உரையாற்றிய கண்டி பிரதி பொலிஸ் மாஅதிபர் ஏக்கநாயக்க பெரும்பான்மை இனத்தை சேர்ந்த குறித்த குழுவினர் மது போதையில் அப்பிரதேசத்துக்கு சென்ற பிரச்சினையில் ஈடுபட்டதால் தான் இந்த சம்பவம் மோதலில் முடிந்தது என்பதை தெளிவுபடுத்தியதுடன் 

இரு தரப்பும் புரிந்துனர்வுடன் சமரசமாக இந்த பிரச்சினையை முடித்துக்கொள்ள வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார்.

சிங்கள வாலிபர்களை தாக்கிய முஸ்லீம் வாலிபர்களை கைது செய்யவேண்டும் என அங்கு வந்திருந்த பெரும்பான்மையினர் கோரியபோது அதற்கு பதில் அளித்த பிரதி பொலிஸ் மாஅதிபர் மூவர் இணங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைதுசெய்வதாக குறிப்பிட்டார்.

தற்போதய நிலமையில் இந்த முருகல் இந்த அளவில் சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை தொடர்ந்து கல்ஹின்னை பிரதேசத்துக்கான பாதுகாப்பை பொலிஸார் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
கல்ஹின்னை பதட்டத்தை தணிக்கும்முகமாக கண்டி DIG தலைமையில் விஷேட கூட்டம் !! கல்ஹின்னை பதட்டத்தை தணிக்கும்முகமாக  கண்டி DIG தலைமையில் விஷேட கூட்டம் !! Reviewed by Madawala News on 9/16/2016 03:54:00 PM Rating: 5