Kidny

Kidny

யானை தாக்கி பெண் பலி.. விழுந்து கிடந்த விழாம்பழத்தை பொறுக்கிய போது தாக்குதல்.



திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு -தங்கபுரம் பகுதியில் இன்று புதன்கிழமை (21) காலை 05 மணியளவில், காட்டு யானை தாக்கி வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

 இவ்வாறு உயிரிழந்த பெண், அதே இடத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் ஜானகி (வயது 64) எனத் தெரியவந்துள்ளது.

குறித்த பெண், மீன் வாங்கிக் கொண்டு வரும் வழியில் விழாம்பழம் மரம் ஒன்றுக்கு அருகில் விழாம்பழம் விழுந்து கிடப்பதை எடுக்கச்சென்ற போது, அவ் மரத்துக்குப் பக்கத்தில் நின்றிருந்த  யானையே இப்பெண்ணைத் தாக்கியுள்ளது. சடலம், சம்பவ இடத்தில் உள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யானை தாக்கி பெண் பலி.. விழுந்து கிடந்த விழாம்பழத்தை பொறுக்கிய போது தாக்குதல். யானை தாக்கி பெண் பலி.. விழுந்து கிடந்த விழாம்பழத்தை பொறுக்கிய போது தாக்குதல். Reviewed by Madawala News on 9/21/2016 09:28:00 AM Rating: 5