Free Space

வெல்கமவின் வழக்கு ஒத்திவைப்பு, திஸ்ஸவுக்கு நோட்டீஸ் , விமல் FCID யில் ..


முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில், சற்று முன்னர் ஆஜரானார். 

இந்த நிலையில் 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவை மன்றில் ஆஜராகுமாறு  கொழும்பு மேல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, போலியான ஆவணங்களை சமர்ப்பித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவரை நீதிமன்றத்தின் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

மேலும் 

நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கமவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். கடந்த அரசாங்கத்தின் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு, பிரதி ஆணையாளர்களை நியமித்து சட்டத்துக்கு விரோதமான முறையில் அவர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்கியமையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு 32 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
வெல்கமவின் வழக்கு ஒத்திவைப்பு, திஸ்ஸவுக்கு நோட்டீஸ் , விமல் FCID யில் .. வெல்கமவின் வழக்கு ஒத்திவைப்பு, திஸ்ஸவுக்கு நோட்டீஸ் , விமல் FCID யில் .. Reviewed by Madawala News on 9/26/2016 03:14:00 PM Rating: 5