Free Space

உதயங்க வீரதுங்கவுக்கு இண்டபோல் பிடியாணை பிறப்பிக்க முடியாது ! FCID யின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது...


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் உறவினரும் முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவருனான உதயங்க வீரதுங்கவுக்கு இண்டபோல் பிடியாணை பிறப்பிக்க கோரிய வேண்டுகோளை கொழும்பு கோட்டை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மிக் போர் விமானம் கொள்வனவில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறவேண்டியிருப்பதாக கூறி பாரிய நிதி மோசடி பிரிவினர் கடந்த வாரம் அவர்க்கு சர்வதேச பிடியாணை கோர அனுமதி கோரியிருந்தது.

குறித்த வழக்கில் உதயங்க வீரதுங்க ஒரு சந்தேக நபர் அல்ல எனவும் வாக்குமூலம் பெற மாத்திரம் அழைக்க அவருக்கு எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிக்க முடியாது என நீதிமன்றம் நிதி மோசடி பிரிவினரின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

உதயங்க வீரதுங்கவுக்கு இண்டபோல் பிடியாணை பிறப்பிக்க முடியாது ! FCID யின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது... உதயங்க வீரதுங்கவுக்கு இண்டபோல் பிடியாணை பிறப்பிக்க முடியாது ! FCID யின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது... Reviewed by Madawala News on 9/30/2016 01:39:00 PM Rating: 5