நாமல் ராஜபக்‌ஷவின் கார் FCID யினரால் கைது !


நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பயன்படுத்தியதாக கூறப்படும், காரொன்றை, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரனைகளுக்காக  தடுத்து வைத்துள்ளனர்.

போர்டு மஸ்ட் டெகன் வகையைச் சேர்ந்த காரே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தக் கார், 2010ஆம் ஆண்டு நாமலுக்கு கிடைத்த பாராளுமன்ற பேர்மிட் ஊடாக இறக்குமதி செய்யப்பட்டு கடந்த 6 வருடங்கள்  பயன்படுத்தப்பட்டதன் பின்னர் வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி குறிப்பிட்டார்.

குறித்த காரின் தற்போதைய உரிமையாளரிடம் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில் அவர் 8 மில்லியன் ரூபாவுக்கு அக்காரை நாமலிடன் இருந்து கொள்வனவு செய்துள்ளதாக ஊடகங்களுக்கு குறிப்பட்டார்.
நாமல் ராஜபக்‌ஷவின் கார் FCID யினரால் கைது ! நாமல் ராஜபக்‌ஷவின் கார் FCID யினரால் கைது ! Reviewed by Madawala News on 9/05/2016 08:30:00 PM Rating: 5