இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம், மேல்மாகாண இலக்கியப் படைப்பாளிகளுடனான சந்திப்பு.



எதிர்வரும் டிசம்பர் 10,11,12ம் திகதிகளில் நடைபெறவுள்ள உலக இஸ்லாமிய மாநாட்டை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள முஸ்லிம் இலக்கியப் படைப்பாளிகளையும் ஆர்வலர்களையும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் சந்தித்து வருகிறது.

இந்த அடிப்படையில் மேல்மாகாணம் மற்றும் அயற்பிரதேசங்களில் வாழும் இலக்கியப் படைப்பாளிகளுடனான சந்திப்பு எதிர்வரும் 18.09.2016 அன்று
பி.ப. 4.00 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் ஆய்வகத்தின் தலைவர் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமையில் நடைபெறவுள்ளது.

தனிப்பட்ட முறையில் இலக்கியப் படைப்பாளிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ள போதும் அழைப்புக் கிடைக்காதவர்கள் இந்தத் தகவலை அவர்களுக்கான அழைப்பாக ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

-அஷ்ரப் சிஹாப்தீன் -
இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம், மேல்மாகாண இலக்கியப் படைப்பாளிகளுடனான சந்திப்பு. இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம், மேல்மாகாண இலக்கியப் படைப்பாளிகளுடனான சந்திப்பு. Reviewed by Madawala News on 9/07/2016 08:31:00 AM Rating: 5