பாகிஸ்தானுடன் யுத்தம் செய்ய இந்தியா அச்சப்பட காரணம் இவைதான்..



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

காஷ்மீர் மாநிலம் யூரியில் ராணுவ முகாம் மீது காஷ்மீர் விடுதலை அமைப்பு நடத்திய தாக்குதலில் 17 இந்திய ராணுவ வீரர்கள்  மரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து விடுதலை அமைப்பு முகாம்களை அழிக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது.

பதிலடி தாக்குதலுக்கு, தயாராகும்படி இந்தியாவுக்கு பல தரப்பில் இருந்தும் நெருக்கடி அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குவதில், இந்திய ராணுவத்துக்கு ஆயுத பலம் இருந்தாலும்,

அதேநேரம், பாகிஸ்தான் ஒரு அணு ஆயுத நாடு என்பதை மறுக்க முடியாது. பாகிஸ்தான் இந்தியாவில் தாக்குதல்கள் நடத்தியது தொடர்பில்  வலுவான ஆதாரங்கள் கிடைத்தும், அந்த நாட்டை தாக்க முடியாததற்கு, அந்த நாட்டின் அணு ஆயுத பலம் ஒரு முக்கிய காரணம்.

ஆனால், இப்படியே பதிலடி தராமல்விட்டாலும், பாகிஸ்தான் அடங்காது. மணிப்பூரில் இந்திய ராணு வீரர்கள் கொல்லப்பட்டபோது மியான்மர் எல்லைக்குள் புகுந்து சென்று கொன்றது  இந்திய ராணுவம். இருந்தும், பாகிஸ்தானில் அதுபோன்ற தாக்குதலை நடத்த தவிர்ப்பதற்கு அணு ஆயுதம் முக்கிய காரணம்.

அணு ஆயுத பிரச்சினையோடு, சீனாவின் ஆதரவும் முக்கிய காரணம். சீனாவும் அணு ஆயுத நாடு என்பது இதில் கவனிக்கத்தக்கது. மேலும் இந்தியா பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆசிய நாடுகளில் சீனாவை விஞ்சக்கூடிய வல்லமை இந்தியாவுக்கு மட்டுமே உள்ளது.

இந்த சூழ்நிலையில், தாக்குதல் தவறாகி போனால், . பாகிஸ்தானுக்கு இழக்க எதுவுமே கிடையாது. ஆனால் இந்தியாவுக்கு இழக்க அதிகம் உள்ளது. இதுவும் பதிலடி தாக்குதலை நடத்தாமல் இருக்க முக்கிய காரணம்.

பாகிஸ்தானுடன் யுத்தம் செய்ய இந்தியா அச்சப்பட காரணம் இவைதான்.. பாகிஸ்தானுடன் யுத்தம் செய்ய இந்தியா அச்சப்பட காரணம் இவைதான்.. Reviewed by Madawala News on 9/19/2016 08:22:00 PM Rating: 5