Accaddemy

இந்தியா எங்கள் மீது போர் தொடுத்தால் இந்தியாவை அழித்து விடுவோம் : பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் .



-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

இந்தியா எங்கள் மீது போரை திணிக்க துணிந்தால் நாங்கள் அழித்துவிடுவோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்  கவாஜா முகமது ஆசிப் கூறிஉள்ளார்.

இந்தியா எங்கள் மீது போரை திணிக்க துணிந்தால் நாங்கள் அழித்துவிடுவோம்.

இந்தியாவின் எந்தஒரு நடவடிக்கையைம் எதிர்க்கொள்ள பாகிஸ்தான் ராணுவம் முழுதயார் நிலையில் உள்ளது என்று கூறிஉள்ளார். போர் ஏற்பட்டால் அணுஆயுதத்தை பிரயோகிப்போம் என்றும் பாகிஸ்தான் கூறிஉள்ளது.

பாகிஸ்தானின் ‘சமா’ தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து உள்ள கவாஜா, ”ஒரு காட்சி பெட்டியில் வைத்து காண்பிக்க நாங்கள் ஆணு ஆயுதங்களை உருவாக்கவில்லை, போர் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் நாங்கள் அணு ஆயுதங்களை பிரயோகிப்போம், இந்தியாவை அழிப்போம்.”

பாகிஸ்தான் வான் பரப்பில் இந்தியா அத்துமீறினால் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் விமானப்படை தயார் நிலையில் உள்ளது. காஷ்மீர் விவகாரத்தை தீர்ப்பதில் இந்தியா சீரியஸாக இல்லை என்று உலக நாடுகளுக்கு தெரியும். பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா தொடங்கியிருந்தாலும் உலக நாடுகளிடம் இருந்து இந்தியாவிற்கு ஆதரவு கிடைக்கவில்லை, சீனா உள்ளிட்ட நாடுகள் எங்களுக்கே ஆதரவு தெரிவித்து உள்ளன. ‘‘பாகிஸ்தானுக்கு அவப்பெயர் உண்டுபண்ணுவதற்காக, உரி ராணுவ முகாம் தாக்குதல் இந்தியா தானாக உருவாக்கிய தாக்குதல் என நான் உறுதியாக நம்புகிறேன்.’’ என்று கூறிஉள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்திருப்பது பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், ‘‘ஒவ்வொரு நாட்டிலும் பாகிஸ்தானுக்கு எதிரான சக்திகள் இருக்கின்றன. ஆனால் அவர்களின் குரல்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது அந்தந்த நாடுகளின் கொள்கைகளை சார்ந்திருக்கிறது. நமக்கு எதிராக 5 அல்லது 10 குரல்கள் எழுந்தால், அது பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிப்பதற்கு போதுமான ஆதாரமாக அமையாது’’ என பதில் அளித்தார்.

பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அசிம் சலீம் பாஜ்வா பேசுகையில், ராணுவ படைகள் எல்லை மேலாண்மை குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எல்லை மேலாண்மைக்காக 20 நிலைகள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. எல்லை மேலாண்மையில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் பணிகளும் ஒன்றுபட்டு இருப்பதால் தான் அந்நாட்டு ராணுவத்தினருடன் கலந்து ஆலோசனை நடத்தினோம்.

பாகிஸ்தான் எந்த நாட்டையும் உறுதியான ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டாது. நாங்கள் கிழக்கு எல்லையில் (இந்திய எல்லை) என்ன முன்னேற்றங்கள் நடக்கிறது என்று தீவிரமாக கண்காணித்து வருகிறோம். எத்தகைய சூழ்நிலையிலும் நாங்கள் பதிலடி கொடுப்பதற்கு தயாராக இருக்கிறோம். என்றார்.

மூலம்: https://in.news.yahoo.com/eliminate-india-imposes-war-us-105327120.html
இந்தியா எங்கள் மீது போர் தொடுத்தால் இந்தியாவை அழித்து விடுவோம் : பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் . இந்தியா எங்கள் மீது போர் தொடுத்தால் இந்தியாவை அழித்து விடுவோம் :  பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் . Reviewed by Madawala News on 9/28/2016 07:32:00 PM Rating: 5