இஸ்ரேலில் கட்டிடம் உடைந்து விழுந்து அனர்த்தம்.. உயிரிழப்புகளுடன் பலத்த சேதம்.



இஸ்­ரே­லிய நக­ரான டெல் அவிவில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வந்த கார் தரிப்­பி­ட­மொன்று இடிந்து விழுந்­ததில் மூவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 24 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.

அத்­துடன் ரமாத் ஹாயில் பிராந்­தி­யத் தில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 7 பேர் இடி­பா­டு­களின் கீழ் தொடர்ந்து சிக்­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மேற்­படி கார் தரிப்­பி­டத்­திற்­கான பல மாடிக் கட்­டட நிர்­மாணப் பணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த பாரந்­தூக்கி உப­க­ர­ண­மொன்று அந்தக் கட்ட­ட­த்தின் மீது சேத­ம­டைந்து விழுந்­த­மையே இந்த அனர்த்­தத்­துக்கு காரணம் என ஆரம்பகட்ட அறி க்­கைகள் கூறு­கின்­றன.

இந்­நி­லையில் இடி­பா­டு­களின் கீழ் சிக்­கி­யுள்­ள­வர்­களை மீட்கும் நட­வ­டிக்­­கையில் பெரு­ம­ளவு தீய­ணைப்புப் படை­வீ­ரர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரேலில் கட்டிடம் உடைந்து விழுந்து அனர்த்தம்.. உயிரிழப்புகளுடன் பலத்த சேதம். இஸ்ரேலில் கட்டிடம் உடைந்து விழுந்து அனர்த்தம்.. உயிரிழப்புகளுடன் பலத்த சேதம். Reviewed by Madawala News on 9/06/2016 11:43:00 AM Rating: 5