Accaddemy

ஓன்றினைந்த எதிர்கட்சி பனிப் பாறைகள் கரைவது போன்று மேற் பகுதியால், மத்தியால், கீழ் பகுதியால் கரைந்து செல்கின்றது.



(அஷ்ரப் ஏ சமத்)

ஓன்றினைந்த எதிரணி முழுமையாகவே பனிப் பாறையொன்றைப் போன்று மேலால், மத்தியால் மற்றும் அடிப் பாகத்தால்; கரைந்து செல்லக் கூடியது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்கள் கொலொன்னாவையில் நடைபெற்ற விசேட மருத்துவ சிகிச்சை நிலையமொன்றை பார்வையிடச் சென்றபோது கூறினார்.


அங்கு பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கூறுகையில்,

 கடந்த காலங்களில் கள்வர்களை பிடிப்பதில்லை என அரசின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டது. கடந்த இரண்டு வார காலத்தினுள் அரசின் மீது மக்களின்; செல்வாக்கு அதிகரித்துள்ளது.

 ஒரு பக்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வருடாந்த விழா வெற்றிகரமாக நடைபெற்றது. அடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த விழாவிற்கு ஆகக் கூடிய எண்ணிக்கையில் மக்களை கொணர்ந்த நாங்கள் எங்களது பலத்தை காட்டினோம்.

 அத்துடன் கடந்த காலத்தில் விசாரணையிலிருந்த வழக்கிற்குரிய குற்றவாளிகள் சிறை செல்கின்றனர். இன்னும் சிலர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இன்று யார் நாளை யார் என்பதை கூற முடியாது என ஒன்றினைந்த எதிரணியே கூறுகிறது. இது அவர்களால் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்பது மட்டுமல்ல, இதை எம்மாலேயே நினைத்துப் பார்க்க முடியவில்லை.

களவெடுத்தவர்களுக்குத்தான் அவர்கள் செய்த களவின் தன்மை என்ன? அதன் பாரதூரம் என்ன மற்றும் அதன்படி கைது செய்யப்படுவோமா இல்லையா என்பது விளங்கும்.

 அதே போன்று கடந்த காலங்களில் அரச அதிகாரம் மற்றும் பணப் பலம் ஆகியவைகளை பயன்படுத்தி உருவாக்கிய செயற்கையான சக்தியே இது. அரச பலம் இல்லாமல் போகும் போதும் கறுப்பு பணத்தை வெளியிட முடியாதபோதும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.

இவைகளை கணக்கிட்டு பார்க்கும்போது ஒன்றிணைந்த எதிரணி மேற் பாகத்தால், அடியால் மற்றும் மத்தியால் கரைந்து செல்கின்றது என கூற முடியும். அதேபோன்று, இவ்வாறான ஒரு கோடை காலம் நீடிக்கும்போது நன்றாகவே கரைந்து விடும். கோடை காலம் என்பது விசாரணையின் இறுதிக் கட்டமாகும். ஆகவே விசாரணைகள் முடிவடைவதால் அது விரைவாகவே கரைந்து விடும்.

ஓன்றினைந்த எதிர்கட்சி பனிப் பாறைகள் கரைவது போன்று மேற் பகுதியால், மத்தியால், கீழ் பகுதியால் கரைந்து செல்கின்றது. ஓன்றினைந்த எதிர்கட்சி  பனிப் பாறைகள் கரைவது போன்று மேற் பகுதியால், மத்தியால், கீழ் பகுதியால் கரைந்து செல்கின்றது. Reviewed by Madawala News on 9/21/2016 04:38:00 PM Rating: 5