Accaddemy

வட கொரிய அதிபர் கிம் ஜோங் – உன்னை படு­கொலை செய்ய போவதாக தென் கொரியா பகிரங்க அறிவிப்பு.



வட கொரிய அணு ஆயு­தங்­களால் அச்­சு­றுத்­தப்­ப­டு­வ­தாக உண­ரப்­படும் பட்­சத்தில் அந்­நாட்டின் தலைவர் கிம் யொங் – உன்னை படு­கொலை செய்ய தமது நாட்டின் படைகள் தயார் நிலையில் உள்­ள­தாக தென் கொரிய பாது­காப்பு அமைச்சர் ஹான் மின் கூ தெரி­வித்தார்.

கிம் யொங் – -உன்னை நீக்­கு­வ­தற்கு விசேட படை­யினர் தயார் நிலையில் வைக்­கப்­பட்­டுள்­ள­னரா என பாரா­ளு­மன்­றத்தில் அவ­ரிடம் வின­வப்­பட்ட போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்

தென் கொரி­யா­வுக்கு வட கொரி­யாவின் பிர­தான தளங்கள் மீது ஏவு­கணைத் தாக்­கு­தல்­களை நடத்­தவும் எதி­ரியின் (கிம் யொங் – உன்னின்) தலை­மைத்­து­வத்தை அகற்­றவும் திட்­ட­முள்­ள­தாக அவர் கூறினார்.

வட கொரியா அணு ஆயுத தாக்­கு­த­லொன்றை நடத்தப் போவ­தாக தனது நாடு உணரும் பட்­சத்தில் வட கொரியா மீது ஏவு­கணைத் தாக்­கு­தலை நடத்தி அந்­நாட்டின் தலை­வரை கொல்ல தமது படையினர் தயார் நிலையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வட கொரிய அதிபர் கிம் ஜோங் – உன்னை படு­கொலை செய்ய போவதாக தென் கொரியா பகிரங்க அறிவிப்பு. வட கொரிய அதிபர் கிம் ஜோங் – உன்னை படு­கொலை செய்ய போவதாக தென் கொரியா பகிரங்க அறிவிப்பு. Reviewed by Madawala News on 9/24/2016 10:03:00 AM Rating: 5