Free Space

பேய்க்கு பயமில்லை என்பதாலே நாம் சுடுகாட்டில் வீடுகட்டி குடியிருக்கிறோம் !! # lka


சிறைக்குள் தள்ளி, தன்னை வளர்ப்புப் பிராணியாக்க முடியாதென்றும் பேய்க்குப் பயந்தால், மயானத்தில் ஒருபோதும் வீடமைக்கப்போவதில்லை என  பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்றுத் திங்கட்கிழமை (12) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது கருத்துரைக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, '

'சிது' தொலைக்காட்சித் தொடரில் வரும் சரண என்ற  பூனையைப் போன்றவனே இந்தக் கம்மன்பில, 'சிறைக்குத் தள்ளினாலும், கம்மன்பிலவின் வாய்ப்பேச்சுக் குறையவில்லை என்று, அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார்.  

நானும், அதையே சொல்கிறேன்.சிறைக்குள் தள்ளி, என்னுடைய வாயை அடைத்துவிட முடியாது. அப்படி நினைத்தால், அது வெறும் கனவு மாத்திரமே. பேய்க்கு பயமில்லாததால் தான், மயானத்தில் வீடமைத்துக்கொண்டு இருக்கின்றோம்' என்றும், கம்மன்பில மேலும் குறிப்பிட்டார்.


பேய்க்கு பயமில்லை என்பதாலே நாம் சுடுகாட்டில் வீடுகட்டி குடியிருக்கிறோம் !! # lka பேய்க்கு பயமில்லை என்பதாலே நாம் சுடுகாட்டில் வீடுகட்டி குடியிருக்கிறோம் !! # lka Reviewed by Madawala News on 9/13/2016 09:38:00 AM Rating: 5