Free Space

இனிவரும் போட்டிகளின் அணித்தலைவர் சந்திமால்.. உபுல் தரங்கவும் களமிறங்குகிறார். lk

அவுஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள ஏனைய கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவி தினேஷ் சந்திமாலுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
.
தற்பொழுது இலங்கை அணியின் தலைவராகவுள்ள அஞ்சலோ மெதிவ்ஸின் காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக நேற்று (02) அவர் எம்.ஆர். ஐ. ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இதன்படி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
.
அவுஸ்திரேலிய அணியுடன் தம்புளை ரங்கிரி மைதானத்தில் நடைபெற்ற 3 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியின் போது அஞ்சலோ மெதிவ்ஸ் உபாதைக்குட்பட்டார்.
.
மெதிவ்ஸுக்குப் பகரமாக உபுல் தரங்க இலங்கை அணிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இதேபோன்று, திஸர பெரேரா மற்றும் லக்ஷான் சந்தகேன் ஆகியோருக்குப் பதிலாக தசுன் ஷானக மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் அணியின் ஒரு நாள் போட்டிகளுக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். D C

இனிவரும் போட்டிகளின் அணித்தலைவர் சந்திமால்.. உபுல் தரங்கவும் களமிறங்குகிறார். lk இனிவரும் போட்டிகளின் அணித்தலைவர் சந்திமால்.. உபுல் தரங்கவும் களமிறங்குகிறார். lk Reviewed by Madawala News on 9/03/2016 06:06:00 AM Rating: 5