Free Space

உடைக்கப்பட்ட புத்தர் சிலை தொடாபாக உரிய நடவடிக்கை எடுக்கவும்.



-ஜே.எம்.ஹபீஸ்-

கிளிநொச்சி பகுதியில் அண்மையில் உடைக்கப்பட்ட புத்தர் சிலை தொடாபாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உள்ளுராட்சி சபை,மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம்  அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வண.வரகாகொடை ஞானரத்ன தேரர் வேண்டுகோள் விடுத்தார். (1.3.206)

அமைச்சர் அஸக்கிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரைச் சந்திக்கச் சென்ற போது அவர் இதனைத் தெரிவித்தார். வண. தேரர் மேலும் தெரிவித்ததாவது-
நடைபெற்ற மேற்படி சிலை உடைப்பு விவகாரம் இனங்களுக்கிடையே ஏற்பட்டுவரும் நல்லிணக்கத்திற்கு பாதமாக இருப்பதாகவும் எனவே அமைச்சரின் தனிப்பட்ட் கவனத்தை ஈர்த்து இது விடயமாக நடவடிக்கை எடுக்க வேண்டு; என்றும் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்ததாவது-
மேற்படி விடயம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை தெளிவுபடுத்த உள்ளதுடன் இது விடயமாக பொலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
உடைக்கப்பட்ட புத்தர் சிலை தொடாபாக உரிய நடவடிக்கை எடுக்கவும். உடைக்கப்பட்ட புத்தர் சிலை தொடாபாக உரிய நடவடிக்கை எடுக்கவும். Reviewed by Madawala News on 9/04/2016 08:35:00 AM Rating: 5