Kidny

Kidny

சினிமா ஸ்டைலில் பொலிஸுக்கு அழைத்து முடிவெட்டிக்கொள்ளும் ஹெட்டன் OIC..


ஹெட்டன் பொலிஸார் தன் மீது தாக்குதல் நடத்தியதாக அப்பிரதேசத்தில் முடி திருத்துபவர் ஒருவர் டிக்கோயா மருத்துவமணையில் அனுமதியாகியுள்ளார்.

இவ்வாறு வைத்தியசாலையில் சிகிற்ச்சைபெற்றுவரும் ஹட்டன் பிரதேச நபர் அங்கு சலூன் கடை ஒன்றை நடத்தி வருபவராவார்.

பொலிஸ் நிலையத்துக்கு வந்து ஒ ஐ சியின் முடி வெட்டிவிடுமாறு உடனடியாக வருமாறு பொலிஸார் இவரை அழைத்துள்ள போது சற்று தாமதமாக வருவதாக வருவதாக கூறியமைக்காக குறித்த நபரை பொலிஸுக்கு அழைத்து சென்று தாக்கியதாக வைத்தியசாலையில் சிகிற்ச்சை பெற்றுவரும் நபர் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு வெளியிட்டு இன்று ஹட்டன் நகரில் ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இங்கு கருத்து வெளியிட்ட முடி திருத்துனர் ஒருவர் கூறுகையில்...

உதவி செய்யும் நோக்கில் தாங்கள் பொலிஸுக்கு சென்று முடி வெட்டி வந்ததாகவும் இனிமேல் அதை செய்யமுடியாது எனவும் குறிப்பிட்டார்.
சினிமா ஸ்டைலில் பொலிஸுக்கு அழைத்து முடிவெட்டிக்கொள்ளும் ஹெட்டன் OIC.. சினிமா ஸ்டைலில் பொலிஸுக்கு அழைத்து முடிவெட்டிக்கொள்ளும் ஹெட்டன் OIC.. Reviewed by Madawala News on 9/24/2016 07:29:00 PM Rating: 5