Kidny

Kidny

ஆரம்பிப்பீர்களா வேலையை... ? இல்லை பழைய பல்லவி தானா?
மு.கா தலைவர் அமைச்சர் ஹக்கீம் பொது மக்கள் நலன் கருதி அம்பாறை மாவட்டத்தில் நடமாடும் சேவை நடத்தி மக்களின் குறை நிறைகளை பூர்த்தி செய்கிறார் வாழ்த்துக்கள்.

நல்ல விடயம்தான்.இலையேன்று சொல்ல வில்லை!

ஆனால் ஒரு மனதன்மை இல்லாத தலைவராக இருக்கிறார் என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது!

இதே அம்பாறை மாவட்டத்தில்தான் ஒலுவிலூர் இருக்கிறது.அது பல ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே!

சில மாதங்களுக்கு முன் பல கோடிகளை செலவு செய்து மிகவும் கோலகலமாக கட்சியின் பேராளர் மாநாட்டை நடத்தி முடித்தது. அதன் தலைமை பாலமுனையில்.
கேவலம் பக்கத்து ஊர் ஒலுவிலின் அவல நிலைமையை கொஞ்சம் கூட பார்த்ததா இந்த தலைமை??

கடலரிப்பால் தொழிலை இழந்தார்கள்,பல்லாயிரக் கணக்கான சொத்துக்களை இழந்தார்கள்,துறைமுகத்துக்காக வழங்கப்பட்ட காணிகளுக்கு இன்றுவரை நஸ்ட ஈடு கொடுபடவுமில்லை. பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள்கூட எடுபவுமில்லை.
ஆனால் கண் துடைப்பாக பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. நிறைவேற்றப் பட்டதா ??

தனது கட்சிக்காக நூறு வீதம் ஆதரவை வழங்கிய,வழங்கி கொண்டிருக்கிற அந்த மக்களை கண்டும் கானாதுபோல் இருந்தது வேதனையை தருகிறது.

ஆனால் தற்போது கடலரிப்பின் வேகம் கூடிக்கொண்டே சொல்லுகிறது என்பதையும் யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று அண்மையில் ஜனாதியினால் அமைச்சரவை குழு ஒன்றும் அமைக்கப் பட்டும். இதுவரை ஒரு வேலையும் ஆரம்பிக்கப்படாமல் காணப்படுகிறது என்பது.
உங்களுடைய இயலான்மையை காட்டுகிறதா?அல்லது மக்கள் ஏமாற்றப் பட்டு கொண்டிருக்கிறார்களா?

ஆனால் தினம் தினம் கடலுக்கு இரையாகி கொண்டுதான் இருக்கிறது. அதன் வேலையை அது செய்து கொண்டுதான் இருக்கு. உங்கள் வேலை எங்கே??

அது மட்டுமா மக்கள் எத்தனையோ தொழில்களை இழந்து என்ன செய்வதென்று அறியாமல் தவித்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு ஒரு தீர்வையும் கொடுக்காமல். ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட குழுவையும் வெறும் பெயரளவில் வைத்துக் கொண்டு.
மக்களையும் தனது வாயால் ஆதரவாளர்கள் மூலம் உசுப்பேத்திக் கொண்டு தான் விரும்பியது போன்று சென்று கொண்டிருப்பதன் அர்தம்தான் என்ன??
அந்த ஒலுவில் மக்களை கண்டும் கானாதுபோல் இருந்து போட்டு இப்போது தனது வாக்கு வங்கியை எப்படியாவது நிலை நிறுத்த வேண்டும் என்று.

வீட்டுக்கு வீடு மரம் என்றும். ஊருக்கு ஊர் நடமாடும் சேவை என்றும். மக்களை திசை திருப்பும் கெளரவ தலைவர் அவர்களே?

நடமாடும் சேவை மக்களுக்கு தேவைதான்.இல்லையேன்று சொல்ல வில்லை. இருந்தும் உங்களை நம்பி இத்தனை வருடமும் வாக்கு போட்ட ஒலுவில் மக்களை நீங்கள் ஒரு விளையாட்டு பெருளாக நினைத்து கண்ணா மூச்சி ஆட்டம் ஆடுவது ஏன்??

தலைவர் அவர்களே நீங்கள் நினைத்திருந்தால் ஒலுவில் கடலரிப்பு மற்றும் வேறு பிரச்சினைகள் எல்லாத்துக்கும் ஒரு தீர்வை கொடுத்திருக்கலாம் அல்லவா? அது இதுவரை நடக்க வில்லை!

நீங்கள் அன்று கூறினீர்கள் அமைச்சரவையில் போதியளவு பணம் இல்லை என்று. இப்போதுதானே ஜனாதிபதியால் குழு அமைக்கப்பட்டு கொடுக்கப் பட்டுள்ளது.அதை வைத்து இன்னும் வேலை ஆரம்பிக்கப் படாமல் இழுத்தடிப்பதன் நேக்கம் என்ன??

உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?பெருந் தலைவர் அஸ்ரப் ஒலுவிலின் வளர்ச்சியை சர்வதேசம் பேசக்கூடியதாக உயர்த்தி காட்டுவேன் என்று கனவு கண்டார்.
ஆனால் துரதிஸ்ட வசமாக அக்கனவு நிறைவேறாமேலே இறையடி சேர்ந்தார்.

அதன் பின்பு அந்த கட்சியின் தலைவராக  வந்த உங்கள் செயற்பாடு. பெருந் தலைவரின் கனவாகத்தான் இருக்க வேண்டும்.

ஆனால் நீங்கள் அதற்கு எதிராக செயற்பட்டுக் கொண்டு. தலைவர் அஸ்ரப் நேசித்தவைகளை புறந் தள்ளி கொண்டு வருகிறீர்கள் என்பதை பல நிகழ்வுகள் காட்டுகிறது.

இப்போதும் கூட குழு ஒன்று அமைத்து சாதகமான பதில் கிடைத்தும் கூட ஜனாதிபதியால். இன்னும் ஒரு வேலையும் ஆரம்பிக்கப் படாமல் இருப்பதை பார்த்தால் மனவேதனை அடைவது மட்டுமல்ல. ஒரு வித சந்தேகமும் ஏற்படுகிறது.

தீர்வை கொடுக்கிறேன் என்று கூறிக் கொண்டு. அரசியல் நகர்வுகளை கட்சிதமாக நகர்த்தி கொண்டு இருக்கிறீர்கள் என்பது தெட்ட தொளிவாகிறது.

எனவே தயவு செய்து உங்களுடைய அரசியல் இலாபங்களுக்காக இந்த மக்களை நம்ப வைத்து. மீண்டும் மீண்டும் அழிவுக்கு இட்டுச் சொல்லாமல்.
பாதிக்கப்பட்ட இந்த ஒலுவில் மக்களுக்கு ஒரு தீர்வை விரைவாக அந்த குழு மூலம் பெற்றுக் கொடுங்கள்.

"காற்றுள்ள போதே தூற்றி கொள்"

என்பது போல் அந்த குழு இருப்பதோடு அனைத்து தீர்வையும் பெற்றுக் கொடுங்கள். இல்லா விட்டால் கடைசியில் சாட்டு போக்கு சொல்லி கையை விரித்து விடாமல்.

தனது பேச்சாற்றல் ஆதரவாளர்கள் பண பலம் பதவி ஆசை இவைகளை காட்டி மக்களை ஏமாத்தி விடலாம்.ஆனால் இறைவனிடத்தில் இருந்து தப்பிக்க முடியாது. என்பதை நினைத்தாவது இந்த மக்களுக்கு விரைவான தீர்வை விரைவாக கொடுக்க வேண்டும்.என்பது மக்கள் எதிர்பார்பு!!


ஒலுவில் ஜெலில்
ஆரம்பிப்பீர்களா வேலையை... ? இல்லை பழைய பல்லவி தானா? ஆரம்பிப்பீர்களா வேலையை... ? இல்லை பழைய பல்லவி தானா? Reviewed by Madawala News on 9/06/2016 02:29:00 PM Rating: 5