Accaddemy

ஜும்மா தொழுகையின் பின்னர் உயிரிழந்த பொலிஸாருக்கு துஆ பிரார்த்தனை.



தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி

இலங்கை பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு நாளையுடன் 150 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இதனை முன்னிட்டு  தோப்பூர் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தோப்பூர் ஹாறாத் ஜும்ஆ பள்ளிவாயலில் இன்று (01) ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து யுத்த காலத்தில் உயிர் இழந்த பொலிஸாருக்காகவும் தற்போது கடமை செய்கின்ற பொலிஸாருக்காகவும் துஆ பிரார்த்தனை இடம் பெற்றது.

இதனை குறித்த பள்ளிவாயலின் தலைவரும் மூதூர் காதி நீதிபதியுமான எஸ்.எம்.றிஸ்வான் மௌலவி நிகழ்த்தினார்.

இந் நிகழ்வில் தோப்பூர் பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி ஐ.பீ.வெண்டகேட் மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
ஜும்மா தொழுகையின் பின்னர் உயிரிழந்த பொலிஸாருக்கு துஆ பிரார்த்தனை. ஜும்மா தொழுகையின் பின்னர் உயிரிழந்த பொலிஸாருக்கு துஆ பிரார்த்தனை. Reviewed by Madawala News on 9/02/2016 02:01:00 PM Rating: 5