Free Space

பிராடோவுக்கான (Prado) வரியை குறைக்கிறார்கள்.. ( நாட்டின் நிலைமை)



- ARM INAS -

இப்பொழுது நாட்டை ஆட்சி செய்பவர்கள் யார்?

ரணில் விக்ரமசிங்கவும்
மலிக்சமரவிக்ரமவும்
சரிதரத்வத்தையும்
அர்ஜூன மகேந்திரனும்...

நாங்கள் ஆட்சியை மாற்றி மக்கள் ஆட்சியை கொண்டு வந்த போதும் இவர்கள் ஆட்சியை நடாத்துவது நாட்டில் உள்ள 10 வீதமான மேல் வர்க்கதினருக்கு வேண்டியது போன்று தான்.

நாட்டில் வாழும் 90 வீதமான ஏழை சாதாரண மக்களை இவர்கள் புறக்கணிக்கிறார்கள். சாதாரண மக்களின் நிலையை இந்த மேல்வர்க்கத்தினர் கண்டுகொள்வதில்லை.

இந்த மேல் வர்க்கத்தினர் நாட்டில் நூறில் பத்து வீதத்தினர்.

இங்கு பிரச்சினை என்னவென்றால் இவர்கள் நாட்டின் வரிக்கொள்கையை வரிக்கொள்கையை தயாரிப்பது நாட்டில் 10 வீதத்தினரான பணக்கார வர்க்கத்தினருக்கு  சலுகைகள் வழங்கவும்
இலாபம் பெற்றுக் கொடுக்கவுமே


வருமான வரியை குறைக்கிறார்கள்
வட்வரியை அதிகரிக்கிறார்கள்
வட்வரி அதிகரிப்பால் கடுமையாக பாதிப்புக்கு உட்படுவது  நாட்டின் 90 வீதமான சாதாரண  மக்களே.

பிரடோவுக்கான (Prado) வரியை குறைக்கிறார்கள் முச்சக்கர வண்டிக்கான வரியை அதிகரிக்கிறார்கள் இந்த நடைமுறையால் பாதிக்கப்படுவது
90 வீதமான ஏழைகளும் சாதாரண வர்க்கத்தினருமே!

ரவிகருணாநாயக  கடந்து ஆண்டு வரவு செலவு திட்ட வாசிப்பில் 10 கோடியை விட பெறுமதியான வீடு வைத்திருப்பவர்களுக்கு
சொகுசு வீடுகளுக்கான விசேட வரி அறவிடுவதாக குறிபிட்டார்.

பொதுமக்கள் எல்லோரும் நினைத்தார்கள்
இந்த அரசு இம்முறை பணக்கார வர்க்கத்தை வாட்டியெடுக்கப் போவதாக.
ஆனால் அது வெறுமனே ஏமாற்று வேலை

அண்மையில் நான் பாராளுமன்றத்தில் சொகுசு வீடுகளுக்கான விசேட வரிமூலம்  அரசுக்கு எவ்வளவு வருமானம் கிடைத்தது என்று  அமைச்சரிடம் கேள்வி கேட்டேன்

ஒரு சதம் கூட கிடைக்கவில்லை என்று பதிலளித்தார் அமைச்சர்.

இந்த அரசு வரவு செலவு திட்டத்தில் மேல் வர்க்கத்திடம் அறிவிடுவதாக சொன்ன வரியை கூட இதுவரை அறவிடவில்லை.

ஆனால் சாதாரண பொதுமக்களிடம் வரி அறவிட சொல்வதற்கு முன்னரேயே வரி அறவிட ஆரம்பித்துவிட்டார்கள்.

பிரச்சினை என்னவென்றால்

நாங்கள் மாற்றத்தை கொண்டு வந்த போதும் மீண்டும் நம்மை ஆட்சி செய்ய வந்திருப்பவர்கள்10 வீதமாக இருக்கும் மேல்வர்க்கத்தில் ஒரு கூட்டம் தான்.

அவர்களுக்கு  நாட்டில் 90 வீதமாக வாழும் சாதாரண மக்களின் கஷ்டம் துன்பம் தெரியாது.

அதனால் தான் இவர்கள் மேல் வர்க்கத்துக்கு சலுகை மேல் சலுகை வழங்கி வருகிறது.

சாதாரண மக்களுக்கு வரிச் சுமைக்கு மேல் சுமையை சுமத்தி வருகிறது.

(ஜேவீபி தலைவர் அநரகுமார திஸாநாயக உரையில் இருந்து )
பிராடோவுக்கான (Prado) வரியை குறைக்கிறார்கள்.. ( நாட்டின் நிலைமை) பிராடோவுக்கான (Prado) வரியை குறைக்கிறார்கள்.. ( நாட்டின் நிலைமை) Reviewed by Madawala News on 9/29/2016 11:52:00 AM Rating: 5