மந்திரி மகன் குடி போதையில் சென்று இளைஞனின் உயிரை பலி எடுத்தான்.



ஹிக்கடுவ கொனபீனுவல பிரதேசத்தில் நடந்த வாகன விபத்தில் 21 வயதான இளைஞன் பலியாகிய சம்பவத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தனவின் உறவு முறை மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

17 வயதான ரவிந்திர அபேகுணவர்தன என்ற இளைஞனே இந்த விபத்தில் சம்பந்தப்பட்டுள்ளார்.

கொனபீனுவல நகரில் சாராலங்கார பாடசாலையிக்கு அருகில் நேற்றிரவு 11 மணியவில் கார் ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கொனபீனுவல பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மற்றுமொரு நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரை ஓட்டிச் சென்ற ரவிந்திர அபேகுணவர்தனவும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பத்தேகம வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்துச் செல்லப்பட்ட ரவிந்திர அபேகுணவர்தன மது போதையில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அவரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

கார் பந்தயங்களுக்கு பயன்படுத்தப்படும் இரண்டு பேர் மாத்திரமே அமர்ந்து செல்லக் கூடிய காரையே இவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

விபத்து நடந்த போது அந்த வாகனத்தில் 4 பேர் பயணம் செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக ரவிந்திர அபேகுணவர்தன கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று பத்தேகம நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.
மந்திரி மகன் குடி போதையில் சென்று இளைஞனின் உயிரை பலி எடுத்தான். மந்திரி மகன் குடி போதையில் சென்று இளைஞனின் உயிரை பலி எடுத்தான். Reviewed by Madawala News on 9/18/2016 02:13:00 PM Rating: 5