Free Space

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள Rolls Royce Wraith நாம் அறியாத விடயங்கள் .



இலங்கைக்கு இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் மிகவும் விலை அதிகமான காரை கொழும்பு ஶ்ரீ சங்கராஜ மாவத்தையில் உள்ள நிறுவனம் ஒன்று அதன் உரிமையாளரின் பாவனைக்காக இறக்குமதி செய்துள்ளது.சகல வரிகளுடன் 158 மில்லியன் (15.8 கோடி) பெறுமதியான இந்த கார் Rolls Royce நிறுவனத்தின் லேட்டஸ்ட் தயாரிபான Rolls Royce Wraith ஆகும்.

இந்த காரின் இறக்குமதி தீர்வையாக 93 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள அதேவேளை Rolls Royce Wraith என்ற காரிற்கான தீர்வை பணம் நேற்றைய தினம் செலுத்தப்பட்டதுடன் தற்போது சுங்க திணைக்களதினால் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் நிறை சுமார் 2.4 தொன்கள் என்றும் இரட்டைக் கதவுகளைக் கொண்ட இந்த கார் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலதரப்பட்ட நவீன ஒப்ஷன்களை கொண்ட இந்த கார் V12 and Turbocharged என்ஜினை யும் 6.6 litres (6600cc) என்ஞின் கெபாசிட்டியையும் 624 hp (465 kW) என்ஞின் வலுவையும் கொண்டது.

மேலும் ஓட்டோ கியரை  கொண்ட இந்த 4.6  செக்கன்களில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டக்கூடியது.

அதிகூடிய வேகமாக மாணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் இந்த காரில் பயனிக்க முடியும்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள Rolls Royce Wraith நாம் அறியாத விடயங்கள் . இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள Rolls Royce Wraith  நாம் அறியாத விடயங்கள் . Reviewed by Madawala News on 9/27/2016 11:48:00 AM Rating: 5