'கோடி' வர்த்தகர் சிறையிலடைக்கப்பட்டார். s

மறைந்திருந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட வர்த்தகர் மொஹமட் நஸ்ரின் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்ட வேளை, எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பகுதியிலுள்ள அரசாங்க வங்கி ஒன்றுக்கு தங்க நகை ஏலத்திற்காக சென்ற அவர் காணாமல் போனதாக, பொலிஸில் முறையிடப்பட்டது.

பண்டாரகம பகுதியைச் சேர்ந்த தங்க நகை வர்த்தகரான மொஹமட் நஸ்ரின், வசம் கோடி ரூபாய் பெறுமதியான பணம் இருந்ததாகவும் பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அவரது தொலைபேசி இலக்கம் மற்றும் சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், மொஹமட் நஸ்ரின் பாதுகாப்பாக இருப்பதாக தெரியவந்தது.

இதன்படி, குறித்த வர்த்தகர் இன்று அதிகாலை 01.00 மணியளவில் ஹல்தும்முல்ல பகுதியில் மறைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

சந்தேகநபர் சில வர்த்தகர்களிடம் சுமார் இரண்டரை கோடி ரூபா கடனாக பெற்றுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
இதனால் மறைந்திருக்கும் நோக்கத்துடன் இவர் இவ்வாறு தப்பிச் சென்றிருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

'கோடி' வர்த்தகர் சிறையிலடைக்கப்பட்டார். s 'கோடி' வர்த்தகர் சிறையிலடைக்கப்பட்டார். s Reviewed by Madawala News on 9/07/2016 05:31:00 PM Rating: 5