Free Space

தாஜுதீனின் காணாமல் போன உடற்கூறுகள் இங்கு இல்லை ! SAITM மருத்துவக்கல்லூரி விளக்கம்

வஸீம் தாஜுதீனின் உடற்பாகங்களை உரப்பையில் போட்டு முன்னாள் அரச வைத்திய அதிகாரி SAITM மருத்துவக்கல்லூரிக்கு சட்டவிரோதமாக கொண்டு சென்றுள்ளதாக  கடந்த நீதிமன்ற அமர்வில் CID தரப்பு தெரிவித்திருந்த நிலையில் ...

SAITM மருத்துவக்கல்லூரி இதற்கு விளக்கம் அளித்துள்ளது.

தங்கள் கல்லூரியில் அப்படியாக எதுவித உடற்பாகங்களும் இல்லை எனவும் அதனை பொருப்பேற்றுக்கொண்டமைக்கான எதுவித பதிவுகளும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ள அதேவேளை இது தொடரில் தங்களிடம் பொலிஸார் விசாரிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

படுபாதகச்செயலை புரிந்தது மட்டுமல்ல உடல் கூறுகளையும் திருடி தனியார் மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பும் அளவுக்கு வக்கிரமும், அதற்கெல்லாம் துணை நின்ற வலையமைப்பும் முன்னைய ஆட்சியில் இருந்துள்ளமை தொடர்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.


தாஜுதீனின் காணாமல் போன உடற்கூறுகள் இங்கு இல்லை ! SAITM மருத்துவக்கல்லூரி விளக்கம் தாஜுதீனின் காணாமல் போன உடற்கூறுகள் இங்கு இல்லை ! SAITM மருத்துவக்கல்லூரி விளக்கம் Reviewed by Madawala News on 9/24/2016 01:43:00 PM Rating: 5