tg travels

எழுந்தோ நடக்கவோ பேசவோ முடியாதுள்ள உலகின் வேக மனிதன் மைக்கல் ஷூமேக்கரில் நாம் படிக்க வேண்டியவை என்ன?



"மைக்கல் ஷூமேக்கருக்கு எழுந்தோ நடக்கவோ பேசவோ முடியாதுள்ளது " அது  இன்றைய தலைப்புச்செய்திகளில் ஒன்று.

வாழ்க்கை என்பதுதான்  எவ்வளவு நிச்சயம் அற்றது ..?

பலவீனத்திலும் பலவீனமான உடலையும் ,ஒரு வினாடியில் சொல்லாமலேயே நீங்கி விடுகிற உயிரையும் வைத்துக்கொண்டு "நான்" என்று நமக்குள்ளேதான் எத்தனை பெருமைகள் .?

ஒரு காலத்தில fastest man என்று  formula 1 கார் ரேசிங்கில் கூறப்பட்டவர் ,பிடிக்க முடியாதவர் என்று சொல்லப்பட்டவர்  ,7 தடவைகள் போர்மியூலா வன்  சாம்பியன் , மிக செல்வாக்கு உள்ளளவர்  ,பெரும் பணக்காரர் .. இப்போது தனது சொந்த இயற்கை உபாதைகளை கூட இன்னொருவரின் உதவியோடு கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் .

நமக்குள்தான் எத்தனை பெருமைகள்?

பணத்தில் பெருமை ,படிப்பில் பெருமை ,படித்த பட்டத்தில் பெருமை ,படித்த பாடசாலையில் பெருமை , தொழில் அந்தஸ்தில் பெருமை பிறந்த ஊரில் பெருமை , அழகில் பெருமை,  நிறத்தில் பெருமை, குடும்ப அந்தஸ்தில் பெருமை , இருக்கும் நாட்டில் பெருமை , வைத்திருக்கும் பாஸ்போர்ட்டில் பெருமை , குழந்தை செல்வத்தில் பெருமை ,பிள்ளைகளில் பெருமை ,எழுத்தில் பெருமை ,நடையில் பெருமை ,உடையில் பெருமை ..

பெருமை  பெருமை பெருமை ....
எதிலுமே நமக்கு பெருமைதான் ..

நமது சொந்த உடைமையான ஆனால்  நமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாத
நமக்குள்ளே இருக்குற பல பில்லியன் நரம்புகளில் ஒரு நரம்பு இழுக்கப்பட்டு விட்டால் வாய்கள் கோணி விடும் உடலின் கீழ்ப்பகுதியோ மேல்பகுதியோ இட , வல  பகுதியோ செயற்பாடற்று போய்விடும் .நாம் கழிக்கிற அசுத்தங்களை,மூக்கை பொத்திக்கொண்டு  இன்னொருவர் சுத்தமாக்க வேண்டிய நிலை ஏற்படும் .

நம்மை சுற்றி ஆபத்துக்களை வைத்துக்கொண்டு நாளை என்னதான் நடக்கும் என்று கூட தெரியாமல் நமக்குள்தான் எத்தனை பெருமைகள் ?

அளவற்ற அருளாளனே அல்லாஹ்வே பெருமைகளின் சொந்தக்காரனே.. ,புகழுக்கு உரியவனே.. எங்களுக்கு எந்த வகையிலும் உரிமை இல்லாத பெருமைகளில் இருந்து எங்களை பாதுகாப்பாயாக ..ஆமீன்
-முஹம்மது ராஜி
எழுந்தோ நடக்கவோ பேசவோ முடியாதுள்ள உலகின் வேக மனிதன் மைக்கல் ஷூமேக்கரில் நாம் படிக்க வேண்டியவை என்ன?  எழுந்தோ நடக்கவோ பேசவோ முடியாதுள்ள உலகின் வேக மனிதன் மைக்கல் ஷூமேக்கரில் நாம் படிக்க வேண்டியவை என்ன? Reviewed by Madawala News on 9/19/2016 05:11:00 PM Rating: 5