Friday, September 16, 2016

அல் குர்ஆன் ஆராய்ச்சி மாநாடு நடந்தே தீரும்.

Published by Madawala News on Friday, September 16, 2016  | மர்ஹும் அஷ்ரப்பின் இயக்கத்தில் இருப்பவர்கள், பிரிந்தவர்கள், பிரிந்து
சென்று வந்தவர்கள், இன்னமும் பிரியக் காத்திருப்பவர்கள் என்ற நீண்ட
பட்டிலுக்கு மத்தியில் அடுத்த வருடம் அல்குர் ஆன் ஆராய்ச்சி மாநாட்டை
நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃபின் 16ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று வௌ்ளிக்கிழமை கொழும்பு தாமரைத்தடாக அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃபின் எமது மறைந்த தலைவருடைய நினைவுகூரல் நிகழ்ச்சி என்கின்ற விடயத்தை அவர் மறைந்த நாள் முதல் பலவாறாக சிந்தித்து வந்திருக்கின்றோம்.

அஷ்ரஃப் எனப்படும் மாமனிதனின் சகவாசம் வாய்கப்பெற்ற நூற்றுக்காணவர்கள் தற்போது சபையிலே இருக்கின்றோம். எமது அரசியல் போராட்டத்தில் அவருடன் கழித்த நாட்களை எண்ணிப்பார்க்கையில் அது அலாதியான சுகானுபவமாகவிருக்கின்றது என்பதற்கு சாட்சி கூறுபவர்களாக நாம் இங்கிருக்கின்றோம்.

அந்த அபூர்வ மனிதனின் அலாதியாக அரசியல் பயணத்தில் எதிர்கொண்ட சவால்கள், இந்த நாட்டின் அனைத்து இனங்களையும் சார்ந்த மக்களை அரவணைத்தமை, பெற்ற ஆசிகள் எனப் பல விடயங்கள் உள்ளன.
ஆலமரத்திற்கு கீழ் எந்த பயிரும் வழமுடியாது எனக்கூறுவார்கள். அதற்கு விதி விலக்காக அஷ்ரஃப் எனும் ஆலமரத்தின் கீழ், பரந்து விரிந்த கிளைகள், விழுதுகள் என்பவற்றுக்கு மத்தியில் பல்வேறு புதிய தலைமைத்துவங்களை அடையாளம் காட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
அத்தகைய அரும்பெரும் தலைவருக்கு நாம் செய்யும் அஞ்சலி எதுவாக இருக்கும் என்று ஆழமாக நோக்கினோம். அத்தகைய தலைவரின் இயக்கத்தில் இருப்பவர்கள், இயக்கத்திலிருந்து பிரிந்தவர்கள், பிரிந்து சென்று வந்தவர்கள், இன்னமும் பிரியக் காத்திருப்பவர்கள் என்ற நீண்ட பட்டில் காணப்படுகின்றனது.

அதற்கு மத்தியில் அத்தகைய தலைவரை நினைவு கூருவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருளிய திருவேதத்தை கொண்டாடுவதே சிறந்த வழி என கருதினோம். அதனை விட வேறெந்த வழியும் இருக்க முடியாது என்ற நம்பிக்கையுடனே இந்த நிகழ்வை நடத்திக்கொண்டிருக்கின்றோம்.
இதன் தொடர்ச்சியாக இதே தினத்தில் அஷ்ரப் அல்குர் ஆன் ஆராய்ச்சி கழகத்தின் ஊடாக அல்குர் ஆன் ஆராய்ச்சி மாநாட்டை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். அத்துடன் அண்ணாரின் நினைவு தினத்தில் அவருடைய ஈடேற்றத்திற்காக பல்வேறு நிகழ்வுகளை மேற்கொள்ளவுள்ளோம் என்பதை உறுதிபடத்தெரித்துக்கௌ்கின்றேன் என்றார்.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top