Accaddemy

இந்திய வம்சாவளி மாணவர்களுக்கான SPDC பட்டப்படிப்பிற்கான புலமைபரிசில்



(JM Hafeez)
இந்திய அரசால் இந்தியாவில்  இந்திய வம்சாவளி மாணவர்கள் பட்டப்படிப்பினை மேற்கொள்வதற்கான புலமைபரிசில் திட்டம் அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
 
கடந்த இருவருடங்களாக இடைநிறுத்தப்பட்ட SPDC திட்டம் இந்திய அரசால் மீல் பரிசீலனையின் பின் 2016/17 ஆண்டு முதல் தொடர்வதற்கு இந்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
இந்திய கல்லூரிகளில் பொறியியல், விஞ்ஞானம், முகாமைத்துவம் மற்றும் பல்வேறு துரைசார் ( மருத்துவம் மற்றும் மருத்துவம் தொடர்புடைய பட்டபடிப்பு தவிர) கற்கை நெறிகளுக்கு இந்திய வம்சாவளியினர் (PIO) மற்றும் குடியிருப்போர் அல்லாத இந்திய (NRI) மாணவர்கள் பட்டப்படிப்பு கல்வி தொடார SPDC புலமைபரிசீல் வழங்கப்படும்.
 
இது தொடர்பான விண்ணப்பங்கள் இணையத்தளத்தினூடாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். 

இணையத்தள முகவரி www.spdcindia.gov.inwww.mea.gov.in

மேலும் இது தொடர்பான இந்தியாவில்; 

உயர் கல்வி பட்டபடிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு கோபியோ ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில்  எதிர் வரும் சனிக்கிழமை  03.09.2016 மாலை 5.00 மணிக்கு இல.179 - 1/1, நீவ் செட்டி தெரு, கொழும்பு 13ல் அமைந்துள்ள ஸ்ரீ ராம் கல்யாண மண்டபத்தில் இடம் பெரும். 

அனுமதி இலவசம்.
 
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு:
கோபியோ ஸ்ரீலங்கா கல்வி குழு அங்கத்தவர்கள் 
திரு. சு. விஜயலிங்கம் (0777 802400)
 திரு. கே. வெள்ளாந்துரை (0777 280636) திரு. கருணாகரன் (071 5147554) அல்லது திரு. பொன். இராஜநாதன் (0777 326462), (கண்டி இந்து கலாசார நிலைய – கல்வி உப குழு) ஆகியோருடன் மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.    
 
இந்திய வம்சாவளி மாணவர்களுக்கான SPDC பட்டப்படிப்பிற்கான புலமைபரிசில் இந்திய வம்சாவளி மாணவர்களுக்கான SPDC பட்டப்படிப்பிற்கான புலமைபரிசில் Reviewed by Madawala News on 9/01/2016 03:04:00 PM Rating: 5