Oceas

கல­வ­ரத்தில் நிறை­வ­டைந்த பெருநாள் விளை­யாட்டுப்போட்டி. ஆட்கள் மீதும் தாக்குதல். #இலங்கையில்



ஹஜ் பெரு­நாளை முன்­னிட்டு நடை­பெற்ற விளை­யாட்டுப்போட்டி ஈற்றில் கல­வ­ரத்தில் நிறை­வ­டைந்­துள்­ளது.

யாழ். கிளி­நொச்சி சம்­மே­ள­னத்­தினால் ஒழுங்குசெய்­யப்­பட்ட ஹஜ் பெருநாள் விளை­யாட்டுப் போட்­டிகள் யாழ்.மஸ்ஜித் முஹம்­ம­தியா திடலில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்­றன. மரதன் ஓட்­டப்­போட்டி, கிறீஸ்­ கம்பம் ஏறுதல், தலை­ய­ணி­சமர், கயிறு இழுத்தல் போன்ற போட்­டிகள் சிறப்­பாக நடை­பெற்­றன. மாலை பரி­ச­ளிப்பு நிகழ்வில் போட்­டி­யா­ளர்­க­ளுக்கு அறி­வித்ததன் பிர­காரம் பரி­சு­கள் வழங்­கப்­பட­வில்­லை­யென போட்­டி­களில் பங்­கு­பற்றி வெற்றியீட்­டி­ய­வர்கள் குற்றம் சுமத்­தி­னார்கள்.

இந்­நி­லையில் சகல போட்­டி­யா­ளர்­களுக்கும் அறி­வித்ததன் பிர­காரம் பணப் பரிசு வழங்­கப்­ப­டல்­வேண்டும் என ஏற்­பாட்­டா­ளர்­க­ளுடன் முரண்­பட்­டனர். இதன்­போது இரு­ த­ரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் வாக்­கு­வாதம் முற்­றி­யது.

இந்­நி­லையில் குறித்த சம்­மே­ள­னத்தின் பொதுச்செய­லாளர் தாக்­கப்­பட்டார். அங்கு வைக்­கப்­பட்­டி­ருந்த கதி­ரைகள் உள்­ளிட்ட ஏனைய பொருட்கள் உடைக்­கப்­பட்­டன.

அதனைத் தொடர்ந்து அங்­கி­ருந்த போட்­டி­களில் பங்­கு­பற்­றி­ய­வர்கள் கற்­களால் ஏற்­பாட்­டா­ளர்­களை தாக்கும் நிலை­மைகள் வலுத்­தன.

இந்­நி­கழ்வில் பார்­வை­யி­டு­வ­தற்­காக வரு­கை­தந்­தி­ருந்த பெண்கள், குழந்­தைகள் உள்­ளிட்டோர் பாது­காப்­பாக வெ ளியேற்­றப்­பட்­டனர். குறித்த சம்­பவம் தொடர்பில் பொலி­ஸா­ருக்கு உட­ன­டி­யாக தகவல் வழங்­கப்­பட்­ட­தை­ய­டுத்து சம்­பவ இடத்­திற்கு வருகை தந்த பொலிஸார் நிலை­மையைக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­தனர்.

தன­வந்தர் ஒரு­வரின் அனு­ச­ர­ணையில் குறித்த விளை­யாட்டுப்போட்டி சம்­மே­ள­னத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டிருந்தது. இந்த ஏற்­பாட்டில் பல்­வேறு முறை­கே­டுகள் காணப்­பட்­ட­தாக போட்­டி­களில் பங்­கு­பற்றி வெற்­றி­யீட்­டி­ய­வர்கள் குற்றஞ் சாட்­டினர்.

இதே­வேளை குறித்த சம்­மே­ளனம் விதி­மு­றை­க­ளுக்கு முர­ணாக தொடர்ச்­சி­யாக இயங்கி வரு­வ­தா­கவும் பல்­வேறு தரப்­புக்­க­ளினால் அவ்­வி­டத்தில் கூறப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.
கல­வ­ரத்தில் நிறை­வ­டைந்த பெருநாள் விளை­யாட்டுப்போட்டி. ஆட்கள் மீதும் தாக்குதல். #இலங்கையில் கல­வ­ரத்தில் நிறை­வ­டைந்த பெருநாள் விளை­யாட்டுப்போட்டி. ஆட்கள் மீதும் தாக்குதல். #இலங்கையில் Reviewed by Madawala News on 9/16/2016 10:17:00 AM Rating: 5