Accaddemy

பிரதி அமைச்சரின் விஷேட விருந்தாளிகளாக T20 போட்டியை காண வாய்ப்பு...


(ஹாசிப் யாஸீன்/அகமட் எஸ்.முகைதீன்)
சாய்ந்தமருது டஸ்கஸ் விளையாட்டுகழகத்தின் நான்கு வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற டஸ்கஸ் பிறீமியர் லீக் 2016 மென்பந்து கிறிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி சாய்ந்தமருது பௌசி ஐக்கிய மைதானத்தில் நேற்று (02)  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ் இறுதிப்போட்டியில் சாய்ந்தமருது ஹொலி ஹீறோஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து சம்மாந்துறை சுப்பர் கிங் விளையாட்டு கழகத்தினர் மோதினர்.

இப்போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட சம்மாந்துறை சுப்பர் கிங் அணியினருக்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்ததுடன் கண்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணியினர் மோதவுள்ள சர்வதேச ரீ-20 கிரிக்கெட் போட்டியினை பிரதி அமைச்சரின் விசேட விருந்தாளிகளாக பார்வையிடுவதற்கான அனுமதியினை பெற்றுக்கொடுத்து வீரர்களுக்கு அதிர்ச்சிப் பரிசளித்தார்.

வெற்றி பெற்ற அணியினருக்கு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியினை விளையாட்டுத்துறை பிரதி  அமைச்சரின்  விசேட விருந்தினராக பார்வையிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி வீரர்களை உச்சாகப்படுத்திய விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸூக்கு சம்மாந்துறை சுப்பர் கிங் அணியினர்இ விளையாட்டு வீரர்கள் கிரிக்கெட் ஆர்வலர்கள் தங்களது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

அணிக்கு 8 பேர் கொண்ட 6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சாய்ந்தமருது ஹொலி ஹீறோஸ் விளையாட்டுக் கழகத்தினர் முதலில் துடுப்பெடுத்தாடினர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஹொலி ஹீறோஸ் அணியினர் 6 ஓவர் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 36 ஓட்டுங்களை பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை சுப்பர் கிங் அணியில் 3 விக்கெட்டுக்களை இழந்து 4.3 ஓவர்;களில் 39 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட்டுக்களில் வெற்றி பெற்று டக்கஸ் பிறீமியர் லீக் - 2016 சம்பியனானது.

இறுதிப் போட்டி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர்இ விஷேட அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்இ கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் டாக்டர் அர்சாத் காரியப்பர் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா கே.எல்.தௌபீக் எம்.றினோஸ் அல்-ஜலால் வித்தியாலய அதிபர் எம்.ஏ.நபார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற சம்மாந்துறை சுப்பர் கிங் அணியினருக்கு வெற்றிக் கிண்ணத்தை பிரதி அமைச்சர் ஹரீஸ வழங்கி வைத்தார்.

பிரதி அமைச்சரின் விஷேட விருந்தாளிகளாக T20 போட்டியை காண வாய்ப்பு... பிரதி அமைச்சரின் விஷேட விருந்தாளிகளாக T20 போட்டியை காண வாய்ப்பு... Reviewed by Madawala News on 9/03/2016 09:37:00 AM Rating: 5