Oceas

உலகின் T20 நம்பர் வன் சக­ல­துறை ஆட்­டக்­காரர் மெக்ஸ்வெல். ஐ.சி.சி அறிவிப்பு....



இலங்கை அணிக்கு எதி­ரான இரு­ப­துக்கு 20 தொடரில் அதி­ரடி காட்­டிய அவுஸ்­தி­ரே­லிய அணியின் அதி­ரடி ஆட்­டக்­கா­ர­ரான மெக்ஸ்வெல் ஐ.சி.சி.யின் இரு­ப­துக்கு 20 கிரிக்­கெட்­டிற்­கான சக­ல­துறை ஆட்­டக்­காரர் தர­வ­ரிசைப் பட்­டி­யலில் முத­லி­டத்­திற்கு முன்­னே­றி­யுள்ளார்.

இலங்கை -– அவுஸ்­தி­ரே­லிய அணி­க­ளுக்கு இடை­யி­லான 2 போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 தொடர் நடை­பெற்­றது.

இதில் முதல் இரு­ப­துக்கு 20 போட்­டியில் 145 ஓட்­டங்களை விளாசி அணிக்கு சாதனை வெற்­றியைத் தேடித்­தந்த அவுஸ்­தி­ரே­லி­யாவின் மெக்­ஸ­்வெல், 2ஆவது போட்­டி­யிலும் 66 ஓட்­டங்கள் அடித்து அவுஸ்­தி­ரே­லிய அணியை வெற்றி பெற வைத்தார்.

இதனால் அவுஸ்­தி­ரே­லிய அணி 2 இரு­ப­துக்கு20 போட்­டிகள் கொண்ட தொடரை 2-–0 என முழு­மை­யாக கைப்­பற்­றி­யது.

இந்­நி­லையில் நேற்று வெளி­யி­டப்­பட்ட ஐ.சி.சி.யின் இரு­ப­துக்கு 20 சக­ல­துறை ஆட்­டக்­காரர் தர­வ­ரிசைப் பட்­டி­யலில் 388 புள்­ளி­க­ளுடன் முதல் இடத்­திற்கு முன்­னே­றி­யுள்ளார் மெக்ஸ்வெல்.

சாஹிப் அல் ஹசன், அப்­ரிடி, சாமுவேல்ஸ் ஆகி­யோர் அடுத்­த­டுத்த இடங்­களில் உள்­ளனர்.

இதே போல் இரு­ப­துக்கு 20 போட்­டி­க­ளுக்­கான துடுப்­பாட்ட வீரர்கள் தர­வ­ரிசைப் பட்­டி­ய­லிலும் மெக்ஸ்வெல் முன்­னேற்றம் கண்­டுள்ளார். அவர் 16 இடங்கள் முன்­னேறி 3ஆவது இடத்தை பிடித் துள்ளார்.
உலகின் T20 நம்பர் வன் சக­ல­துறை ஆட்­டக்­காரர் மெக்ஸ்வெல். ஐ.சி.சி அறிவிப்பு.... உலகின் T20 நம்பர் வன் சக­ல­துறை ஆட்­டக்­காரர் மெக்ஸ்வெல். ஐ.சி.சி அறிவிப்பு.... Reviewed by Madawala News on 9/12/2016 10:32:00 AM Rating: 5