Accaddemy

THE GUARDIAN சிறுவர் மேம்பாட்டு மையம் திகன கும்புக்கந்துரையில்

மத்திய மாகாணத்தில் "THE GUARDIAN" என்ற பெயரில் "சிறுவர் மேம்பாட்டு மையம்"திகன கும்புக்கந்துரையில் இன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.


மத்திய மாகாணத்தில் "THE GUARDIAN" என்ற பெயரில் "சிறுவர் மேம்பாட்டு மையம்"திகன கும்புக்கந்துரையில்  இன்று 19-09-2016 காலை 8.30 மணிக்கு முஸம்மில் மௌலவி ( President of Baithulzakath Akurana ),யூஸுப் மௌலவி தலைமையில் நிரவாகக்குழு உறுப்பின்  சகிதம் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ்! 

முதற்கட்டமாக 4 ஆண் பிள்ளைகளை வைத்து ஆரம்பிக்கப்பட்ட இச்சிறுவர் மேம்பாட்டு மையம் எதிர்வரும்  காலங்களில் 5வயதிலிருந்து 10வயதுக்கு உற்பட்ட ஆண் பிள்ளைகளை சேர்த்துக்கொள்வதாக நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் சுமார் 37 சிறுவர் மேம்பாட்டு நிலையங்கள் இருக்கின்றன. எனினும் முஸ்லீம்களுக்கென்று பிரத்தியேகமான சிறுவர் மேம்பாட்டு நிலையமொன்று இதுவரை காலமும் அமையப்பெறவில்லை என்பது துரதிஷ்டமே. இதனால் எமது சமூகத்தினால் கைவிடப்பட்ட சிறார்கள் அன்னிய சிறுவர் நிலைங்களிலே பாராமரிக்கப்பட்டு வருகின்றனர். இப்பெரும் குறையை நிவர்த்தி செய்து கைவிடப்படும் எமது சிறார்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதே மத்திய மாகாணத்தில் இந்த சிறுவர் மேம்பாட்டு நிலையம் நிருவுவதற்கு முக்கிய காரணமாகும். முஸ்லிம் தாய் தந்தைக்கு பிறந்த குழந்தை முஸ்லிமாகவே வாழ்ந்து மறைய வழி வகுப்பது எம் அனைவரினதும் கடமையாகும்.

இச்சிறுவர் மேம்பாட்டு மையத்தின் முன்னேற்றத்திற்கு எம்மால் ஆன உதவி ஒத்தாசைகளை வழங்கி இந்த அளப்பரிய சேவைக்கு நாமும் பங்குதார்ர் ஆகுவோம்.. 

தொடர்புகளுக்கு! 

Al haj Moulavi M.N.M Rifaz (President) 0773744936

Mr. Zamreen Zarook (Secretary) 


Al haj M.F.M Nayeem (Treasurer) 0776792727 

Ramzan Mawlawi (Coordinators) 

"THE GUARDIAN" Child Development Center No.12, Dhambagahamula, Gonawela, Digana Rajawella, Kandy, Sri Lanka Account No: 0110252745001 (Amana Bank Kandy Branch)

தகவல் -றிஸ்மி ராஸிக்
கலகெதர.
THE GUARDIAN சிறுவர் மேம்பாட்டு மையம் திகன கும்புக்கந்துரையில் THE GUARDIAN சிறுவர் மேம்பாட்டு மையம் திகன கும்புக்கந்துரையில் Reviewed by Madawala News on 9/20/2016 08:05:00 AM Rating: 5