Free Space

புலி­கள் செய்த தாக்குதல்களுக்கு எவரும் விசா­ரணை செய்­ய­வில்லை. தமி­ழர்கள் கொலை செய்­யப்­பட்டால் மட்டும் ஐ.நா குமுறுகிறது.



(க.கம­ல­நாதன்)
இரா­வணா பலய மற்றும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கம்
ஆகிய அமைப்புக்களைச் சேர்ந்த பிக்­குகள் கொழும்­பி­லுள்ள ஐக்­கிய நாடுகள் சபை அலு­வ­ல­கத்தின் முன்­பாக பான் கீ மூனின் வரு­கைக்கு எதிர்ப்பை வெளி­யிட்டு ஆர்ப்­பாட்ட­மொன்றை நேற்று முன்­னெ­டுத்­தனர்.இதன்­போது பொலி­ஸா­ருக்கும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட பிக்­கு­க­ளுக்கும் இடையில் முறுகல் நிலைஏற்­பட்­டது.

கெப்­பத்­திக்­கொல்­லாவை, கண்டி தலதா மாளிகை ஆகிய இடங்கள் மீதான குண்­டுத்­தாக்­குதல், சிறு­வ­யது பெளத்த பிக்­கு­களின் படு­கொலை ஆகிய விட­யங்கள் தொடர்பில் புலி­களை எவரும் விசா­ரணை செய்­ய­வில்லை. அதனால் குறித்த பிரச்­சி­னைகள் தொடர்­பிலும் ஐ.நா.பிர­தி­நி­திகள் கவ­ன­மெ­டுக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­தியே இந்த போராட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­களை சந்­திக்க வருகை தந்த ஐக்­கிய நாடுகள் அலு­வ­லக பிர­தி­நிதி ஒரு­வ­ரி­டத்தில் ஆர்ப்­பாட்ட காரர்கள் தமது பரிந்­து­ரைகள் அடங்­கிய ஆவ­ணத்தை கைய­ளித்து விட்டு தமது வாக­னங்­க­ளுக்கு செல்ல முற்­பட்ட போது அவ்­வி­டத்­திற்கு ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் பான் கீ மூன் வருகை தந்தார்.

இந்­நி­லையில் பாது­காப்பு கார­ணத்­துக்­காக வாக­னங்­க­ளுக்கு சென்­றுக்­கொண்­டி­ருந்த ஆர்­பாட்­ட­கா­ரர்­களை பொலிஸார் இடை­ம­றித்தால் பொலி­ஸா­ருக்கு ஆர்­பாட்ட காரர்­க­ளுக்கு மத்­தியில் முறுகல் நிலை ஏற்­பட்­டது. அதன் போது ஆர்ப்­பாட்ட காரர்கள் பொலி­ஸாரை தள்­ளி­விட்டு முன்­செல்ல முற்­பட்­ட­போதும் அவர்­களின் முயற்­சிகள் சாத்­தி­யப்­ப­ட­வில்லை.

அதன் பின்னர் குறித்த இடத்தில் ஐ.நா.பிர­தி­நி­திகள் பலரின் புகைப்­ப­டங்கள் பிர­சு­ரிக்­கப்­பட்ட பதா­கை­களை ஏந்­திக்­கொண்டு ஆர்ப்­பாட்ட்தில் ஈடு­பட்­டனர்.
இதன்­போது தேசப்­பற்­றுள்ள தேசிய பிக்­குகள் ஒன்­றி­யத்தின் தலைவர் அங்­கு­னு­கல்லே ஜினா­நந்த தேரர் தெரி­விக்­கையில்,

இதற்கு முன்னர் ஐ.நா. வை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி நவ­நீ­தம்­பிள்ளை இலங்கை வருகை தந்­தி­ருந்தார். அவரும் நேர­டி­யாக முல்­லைத்­தீ­வுக்கு சென்று தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை மாத்­திரம் கேட்­ட­றிந்­துக்­கொண்டு திரும்­பிட்டார்.

தமி­ழர்கள் கொலை செய்­யப்­பட்டால் குமுறும் ஐ.நா. சிங்­க­ள­வர்கள் கொலை தொடர்பில் மாத்திரம் ஏன் மௌனம் சாதிக்கின்றது? அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அல் ஹுசைன் வருகை தந்த போதும் சிங்கள் மக்களின் பிரச்சினைகள் குறித்து துளியும் ஆராயப்படவில்லை என்றார்.

புலி­கள் செய்த தாக்குதல்களுக்கு எவரும் விசா­ரணை செய்­ய­வில்லை. தமி­ழர்கள் கொலை செய்­யப்­பட்டால் மட்டும் ஐ.நா குமுறுகிறது.  புலி­கள் செய்த தாக்குதல்களுக்கு எவரும் விசா­ரணை செய்­ய­வில்லை. தமி­ழர்கள் கொலை செய்­யப்­பட்டால் மட்டும் ஐ.நா குமுறுகிறது. Reviewed by Madawala News on 9/02/2016 10:26:00 AM Rating: 5