Free Space

வியர்வை சிந்திய மக்களுக்கு கிடைத்தது வெற்றி... அனைவருக்கும் நன்றி.



- எப்.முபாரக் -

2016/09/13 செவ்வாய் உச்சநீதிமன்றிலே மின்சக்தி எரிசக்தி அமைச்சின் செயலாளரினால் சம்பூர் நிலக்கரி அனல்மின் நிலையம் கைவிடப்பட்டுவிட்டதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. \

இச் செய்தியை இந்த நீண்ட போராட்டம் தோறும் வியர்வை சிந்தி உழைத்த அத்தனை நண்பர்களுக்கும்,என்  னுடன்  போராடிய மக்களுக்கும் கிடைத்த வெற்றிப்பரிசாகும்.

நல்லாட்சி அரசின் காதுகளுக்குச் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கின்ற இப்போராட்டத்தின் ஒவ்வொரு படிக்கற்களையும் வலுவாக்க இரவு பகல் பாராது உழைத்த இலங்கை முழுவதுமிருந்து எம்முடன் சமூக அக்கறை கொண்ட ஏராளமான தனி மனிதர்களும் அமைப்புக்களும் இப்போராட்டம் முழுவதும் கூடவே பயணித்தது மட்டுமின்றி வெயிலையும் மழையையும் பாராது உணவின்றி தண்ணீரின்றி எம்மக்கள் வீதிகளில் நின்று இந்த நாளுக்காக தொண்டை வரள வரள கோசமிட்டிருக்கின்ற அனைத்து நல் உள்ளங்களையும் மற்றும் எமக்காக  குரல் கொடுத்த அனைவரையும் நாம் நன்றியுடன் நினைவு கூறி வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.


அல்ஹாஜ் ஜே.எம்.லாகீர் சட்டத்தரணி
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
திருகோணமலை.


வியர்வை சிந்திய மக்களுக்கு கிடைத்தது வெற்றி... அனைவருக்கும் நன்றி. வியர்வை சிந்திய மக்களுக்கு கிடைத்தது வெற்றி... அனைவருக்கும் நன்றி. Reviewed by Madawala News on 9/14/2016 04:08:00 PM Rating: 5