Oceas

ரணில் மற்றும் ஜனாதிபதி சிறிசேனவை நம்பி சத்தமில்லாமல் இருக்கவும். விமலுக்கு மகாநாயக்க தேரரின் அறிவுரை.



புதிய அரசியலமைப்பொன்றை அறிமுகம் செய்ய முன்னர், சந்தேகமான அறிவிப்புக்களை மேற்கொள்ள வேண்டாம் என மல்வத்த மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் மல்வத்த அஸ்கிரி மகாநாயக்க தேரரை அறிவுட்டும் நோக்கில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச இன்று(13) கண்டி தலதா மாளிகைக்குச் சென்று கலந்துரையாடியுள்ளார். இதபோதே மகாநாயக்க தேரர் இதனைக் கூறியுள்ளார்.

எமக்குள்ள அனுபவத்தின்படி, உத்தேச அரசியலமைப்பு யோசனை நாட்டிற்கு பாரிய அச்சுறுத்தல் ஆகும். அதனை தாமதிக்காமல் அறிவிப்பது எமது கடமையாகும் என மகாநாயக்க தேரரிடம் விமல் வீரவங்ச எடுத்துக் கூறியுள்ளார்.

இதற்குப் பதிலளிக்கையில் தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பில் நாட்டைப் பிரிக்கும் எந்தவொரு யோசனையும் இடம்பெற மாட்டாது என ஜனாதிபதியும், பிரதமரும் உறுதிப்பட தெரிவித்துள்ளனர். இது இவ்வாறிருக்கையில் தேவையற்ற பயம் அவசியமற்றது எனவும் மகாநாயக்க தேரர் விமல் வீரவங்சவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ( D C)
ரணில் மற்றும் ஜனாதிபதி சிறிசேனவை நம்பி சத்தமில்லாமல் இருக்கவும். விமலுக்கு மகாநாயக்க தேரரின் அறிவுரை. ரணில் மற்றும் ஜனாதிபதி சிறிசேனவை நம்பி சத்தமில்லாமல் இருக்கவும். விமலுக்கு மகாநாயக்க தேரரின் அறிவுரை. Reviewed by Madawala News on 9/14/2016 08:36:00 AM Rating: 5