Free Space

இணையதளங்களால் பிரச்சினை.. சகல இணை­யத்­த­ளங்­க­ளையும் பதி­வு­செய்ய வேலைத்திட்டம்.



சகல இணை­யத்­த­ளங்­க­ளையும் பதி­வு­செய்­வ­தற்­கான வேலைத்­திட்­டத்­தினை முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக தொலைத்­தொ­டர்­புகள் ஒழுங்­கு­ப­டுத்தல் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது. அண்­மையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் தொலைத்­தொ­டர்­புகள் ஒழுங்­கு­ப­டுத்தல் ஆணைக்­கு­ழுவின் அதி­கா­ரி­க­ளுக்­கி­டையில் இடம்­பெற்ற விசேட கலந்­து­ரை­யா­டலின் அடிப்­ப­டை­யி­லேயே இந்­தத்­தீர்­மா­னத்தை எடுக்க அர­சாங்கம் முன்­வந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தற்­போது இலங்­கையில் பதிவு செய்­யப்­ப­டாத இணை­யத்­த­ளங்­களின் பாவனை பாரிய அளவில் அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் அதனால், பல்­வேறு நடை­முறை சார்ந்த பிரச்­சி­னைகள் தோன்­றி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சில இணை­யத்­த­ளங்கள் மிகவும் மோச­மான செயற்­பா­டு­களில் ஈடு­பட்டு வரு­வ­தாக முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தா­கவும் தொலைத்­தொ­டர்­புகள் ஒழுங்­கு­ப­டுத்தல் ஆணைக்­குழு குறிப்­பிட்­டுள்­ளது.

ஆகையால், தொலைத்­தொ­டர்­புகள் ஒழுங்­கு­ப­டுத்தல் ஆணைக்­கு­ழுவில் பதி­வு­செய்­யப்­ப­டாத இணையத் தளங்­களின் செயற்பாடுகளை முடக்குவதுடன் அவ்வாறு இணையத்தளங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்க அரசாங்கம் தீர் மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.
இணையதளங்களால் பிரச்சினை.. சகல இணை­யத்­த­ளங்­க­ளையும் பதி­வு­செய்ய வேலைத்திட்டம். இணையதளங்களால் பிரச்சினை.. சகல இணை­யத்­த­ளங்­க­ளையும் பதி­வு­செய்ய வேலைத்திட்டம். Reviewed by Madawala News on 9/11/2016 01:52:00 PM Rating: 5