தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு ஒப்பந்தம் கைச்சாத்து : 1000 ரூபா இல்லை ..

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 730 ரூபாவாக அதிகரிப்பதற்கான  கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டடுள்ளது.

பெருந்தோட்ட உரிமையாளர்களின் சங்கம் மற்றும் தோட்ட சங்கத்திற்கு இடையிலான இந்த ஒப்பந்தம் சர்வதேச வர்த்தகம் மற்றும் வளர்ச்சி மூலோபாயம் அமைச்சகத்தில் இன்று கைச்சாத்திடப்பட்டது.

630 ரூபாவாக இருந்த நாளாந்த சம்பளத்தை 730 ரூபாவாக அதிகரிக்க முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கத்தினரும் இணங்கி, இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

என்றாலும் தமக்கு 1000 ரூபா ஒருநாள் சம்பளம் வேண்டும் என தோட்டத் தொழிலாளர்கள் கடந்த சில தினங்களாக நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

 

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு ஒப்பந்தம் கைச்சாத்து : 1000 ரூபா இல்லை .. தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு ஒப்பந்தம் கைச்சாத்து : 1000 ரூபா இல்லை .. Reviewed by Madawala News on 10/18/2016 07:18:00 PM Rating: 5