Free Space

கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரிக்கு 10 கணனிகள் அன்பளிப்பு.



கல்முனை அல்-ஹாமியா அரபுக்கல்லூரியில் கல்வி கற்று கட்டாரில் தொழில் புரியும் உலமாக்களினால் தங்களது கல்லூரியில் மார்க்கக் கல்வி கற்று வரும் மாணவர்கள் கணனி துறையிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு முதற் கட்டமாக சுமார் பத்து கணனிகளை இக் கல்லூரியின் அதிபர் மௌலவி  ulm. Gafoor (falahi) அவர்களிடம் கையளிப்புச் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

 இந்நிகழ்வின் போது கல்லூரியின் நிர்வாகத் தலைவர், மாகாண சபை உறுப்பினர, சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் அவர்களும்  கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுத் தலைவர் மௌலவி U.L ஹமீத் (ஹாமி) மற்றும் பொதுச் செயலாளரர் மௌலவி A.L. .நாஸீர்கனி(ஹாமி),அவர்களும் கல்லூரியின் பழைய மாணவர்களின் கட்டார் கிளை சார்பாக அதன் செயலாளர் மௌலவி .பர்ஸாத்(ஹாமி),

 பொருளாளர் .ஜனுபர்(ஹாமி) மற்றும் நபீர்(ஹாமி) அவர்களும்,கல்லூரியின் ஆசிரியர்கள்,நிருவாகிகள்,மற்றும் மாணவர்கள் அடங்கலாக பலர்; கலந்து சிறப்பித்தனர்.

இந்;நிகழ்வில் கல்லூரி அதிபர் பழைய மாணவர் சங்கத்திற்;கும்; கட்டார் கிளையின் தலைவர் .புஹாரி(ஹாமி) அவர்களுக்கும் அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றிகளை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் மேலும் இதற்கு உறுதுணையாக நின்று உழைத்த அனைத்து ஹுமாத்களுக்கும் எமது அல் ஹாமியா அரபுக் கல்லூரி பழைய மாணவர்களின் கட்டார் கிளை சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மௌலவி A.A.M பர்ஸாத்(ஹாமி)
செயலாளர்.
அல்-ஹாமியா பழைய மாணவர் சங்கம,;
கட்டார் கிளை.




கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரிக்கு 10 கணனிகள் அன்பளிப்பு. கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரிக்கு 10 கணனிகள் அன்பளிப்பு. Reviewed by Madawala News on 10/19/2016 08:11:00 PM Rating: 5