Free Space

உக்குவளை அஜ்மீர் ... தரம் 11 இற்கான மாபெரும் புதிர்போட்டி 2016



உக்குவளை அஜ்மீர் மத்திய கல்லூரி (தேசிய) அதிபர் ஜனாப். நிஸ்பர் அவர்களின் வழிகாட்டலில் ஆசிரிய குழாத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான  புதிர் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு(Grand finale) 2016.10.19 ஆம் திகதி மு.ப. 11.30 இற்கு அஜ்மீர் தேசிய கல்லூரி  கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது.நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இறுதிப் போட்டியில் மாத்தளை சாஹிராக் கல்லூரி, பாக்கியம் தேசிய பாடசாலை,குரிவெல ஹமீயாக் கல்லூரி,வரக்காமுற அந்நூர் முஸ்லிம் மகா வித்தியாலயம், அஜ்மீர் தேசியக் கல்லூரி ஆகிய பாடசாலைகளிலிருந்து 21 அணிகள் மோதிக் கொண்டதன.

பிரதான பாடங்கள் 6 இலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டு அதற்கான புள்ளிகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக அஜ்மீரின் பழைய மாணவர்களான  Dr.Aslam Dr.Rizvi Dr.Siraj ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.இறுதிப் போட்டியில் 225 புள்ளிகள் பெற்று மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலை அணி சம்பியன் கிண்ணத்தை தன் வசப்படுத்திக் கொண்டது.220 புள்ளிகள் பெற்று அஜ்மீர் தேசிய பாடசாலை அணி இரண்டாம் இடத்தையும் 205 புள்ளிகள் பெற்று வரக்காமுற அந்நூர் மு.வி.அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

தகவல் - முஹம்மட் சாதிகீன் (ஆசிரியர்)




உக்குவளை அஜ்மீர் ... தரம் 11 இற்கான மாபெரும் புதிர்போட்டி 2016 உக்குவளை அஜ்மீர் ... தரம் 11 இற்கான மாபெரும் புதிர்போட்டி 2016 Reviewed by Madawala News on 10/20/2016 10:40:00 PM Rating: 5