இலங்கையின் வடகிழக்காக மணிக்கு 11 கிலோமீற்றர் வேகத்தில் கயன்ற் சூறாவளி.


கிழக்கு-மத்திய வங்காளவிரிகுடாப் பகுதியில் உருவாகியிருந்த வலுவான தாழமுக்கமானது (KYANT)  தற்போது சூறாவளியாக (Deep Depression) வளர்ச்சியடைந்துள்ளது. 

இது தற்போது மணிக்கு 11 கிலோமீற்றர் வேகத்தில் மேற்கு- தென்மேற்கு திசையில் நகர்ந்துகொண்டிருக்கிறது. 

இந்த சூறாவளிக்கு மீயன்மார் நாட்டினால் பிரேரிக்கப்பட்ட கயன்ற்  எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இந்த சூறாவளியானது இலங்கையின் வடகிழக்காக 1400 கிலோமீற்றர் தூரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவின் போட் பலயர்  இலிருந்து வடக்கு-வடமேற்காக 610 கிலோமீற்றர் தூரத்திலும் கோபால்பூர்இலிருந்து தெற்கு-தென்கிழக்காக 660 கிலோமீற்றர் தூரத்திலும் விசாகப்பட்டணத்திலிருந்து கிழக்காக 780 கிலோமீற்றர் தூரத்திலும் தற்போது காணப்படுகிறது.

 இது மேலும் வலுவடைந்து அடுத்த 74 மணித்தியாலத்திற்கு மேற்கு-தென்மேற்கு திசைநோக்கி நகர்ந்து வங்காளவிரிகுடாவின் மேற்கு-மத்திய பகுதியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


க.சூரியகுமாரன், வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களம்.

இலங்கையின் வடகிழக்காக மணிக்கு 11 கிலோமீற்றர் வேகத்தில் கயன்ற் சூறாவளி. இலங்கையின் வடகிழக்காக   மணிக்கு 11 கிலோமீற்றர் வேகத்தில்  கயன்ற்  சூறாவளி. Reviewed by Madawala News on 10/25/2016 06:44:00 PM Rating: 5