Free Space

123 பேருக்கு ரூ.300- மில்லியன் நட்டஈடு ..



இவ்வரசில் களவாட எண்ணியுள்ளவர்களுக்கு காய்ச்சல் பீடிக்க முன்னர் முன்னைய அரசாங்கத்தில் களவாடியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்..

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்

இவ்வரசில் களவாட எண்ணியுள்ளவர்களுக்கு பாடமொன்றாக அமைவதற்கு கடந்த அரசில் களவுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் அவர்கள் கூறினார்கள்.

ஒருகொடவத்தை – அம்பத்தலை தாழ் மட்ட பாதை அபிவிருத்தியினால் காணிகளை இழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு மேற்குறிப்பிட்ட கருத்தை வெளியிட்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த உறுப்பினர் அவர்கள்,ஏற்கனவே கடந்த அரசில் மேற்கொண்ட களவு, மோசடி மற்றும் கொலைகளுக்கு தண்டனை வழங்கப்படுவதற்காகவும் விசேடமாக பொது மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்ததனால் ஏற்பட்ட இழப்புகளுக்காக மக்களுக்கு நியாயம் வழங்குவதற்காகவுமே நாங்கள் நல்லாட்சியை கொண்டு வந்தோம். 

இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.  எமது அரசில் களவாட எண்ணியுள்ளவர்களுக்கு இவ்வாறான காய்ச்சல் பீடிக்கப்படுவதற்கு முன்னர் ஏற்கனவே களவாடியவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதில்தான் இதன் முக்கியத்துவம் பொதிந்துள்ளது. இவ்விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் நாமல் ராஜபக்ஸ அவர்கள் அவருக்கு எதிராக எப்சிஐடியால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு இரண்டு ரூ.200 மில்லியன் நட்டஈடு கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளார். மஹிந்த அவர்கள் இன்னும் பல கோடிகள் கேட்டு உரிமை கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இவர்கள் என்ன கூறுகிறார்கள்? வாய் பொய் சொன்னாலும் நாக்கு பொய் சொல்லாது என்பார்கள். எப்சிஐடியில் நாமல் அவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்பவர் அவரை விட பெரிய கள்வனாம் என்று நாமல் கூறுகிறார்.இதன் மூலம் அவர் கள்வனென ஒப்புக் கொள்கிறார். நாங்கள் செய்த களவுகளை விசாரிக்க வேண்டாம்.  அதேபோன்று ஏனையவர்கள் மேற்கொண்ட களவுகளையும் விசாரிக்க அவசியமில்லை என்பதையே இவர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் அரசியல்வாதிகள் என்பவர்கள் களவெடுப்பதற்காகவே உள்ளவர்கள். பதவிக்கு வருவது சேவை செய்வதற்கல்ல் களவெடுப்பதற்காகவே என்பதை இவர்கள் உறுதி செய்கின்றனர்.

தற்பொழுது, மக்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள் என்பதை இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.   மக்கள் இவைகளை மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தேவையான சந்தர்ப்பத்தில் சரியான தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு நான் மக்களை கேட்டுக் கொள்கிறேன்.  

 
123 பேருக்கு ரூ.300- மில்லியன் நட்டஈடு .. 123 பேருக்கு ரூ.300- மில்லியன் நட்டஈடு .. Reviewed by Madawala News on 10/18/2016 01:12:00 PM Rating: 5