Accaddemy

நேற்றைய மேல் மாகாணத்தில் சுற்றிவளைப்பு: 1262 பேர் கைது

மேல் மாகாணத்தில் பொலிஸாரால் நேற்றிரவு (13) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையை 1262 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில், பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் 46 பேர் அடங்குவதாக சிரேஸ்ட பிரதிபொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க தெரிவித்தார்.

மேலும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 177 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்குள் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 17 சந்தேகநபர்களும் அடங்குகின்றனர்.

இதனைத்தவிர, சந்தேகத்தின் அடிப்படையில் 540 பேரும் இந்த சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் இருந்து தப்பிச்சென்ற இருவரும் முப்படையிலிருந்து தப்பிச்சென்ற நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவி்த்தனர்.

மேலும், போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 23 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய 103 பேரும், விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய 323 பேரும் இந்த சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் அனைத்து பொலிஸ் நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நேற்றிரவு 11 மணி தொடக்கம் இன்று அதிகாலை 1 மணி வரை இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

3072 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய மேல் மாகாணத்தில் சுற்றிவளைப்பு: 1262 பேர் கைது நேற்றைய மேல் மாகாணத்தில் சுற்றிவளைப்பு: 1262 பேர் கைது Reviewed by Madawala News on 10/14/2016 05:00:00 PM Rating: 5