செப் 13 அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ள வெட் சட்டமூலத்திற்க்கு 9 வர்த்தமானி அறிவித்தல் !


பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தச் சட்டமூலம், நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாயக்கிழமை சபைத்தலைவர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்லவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த சட்டமூலம் சட்டத்துக்கு முரணானது என கூட்டு எதிர்கட்சி இன்று பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் 13 ம் திகதி இந்த சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள போதும் இந்த சட்டமூலம் செப்டம்பர் ஒன்பதாம் திகதி சட்ட்டமூலம் தொடர்பான  வர்தமானி அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்ட  அதேவேளை இது சட்டத்துக்கு முரணானது என கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் குறித்த செயற்பாடு சட்டத்துக்கு முரணானது என கருதும்பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுமாறு சபாநாயகர் கூட்டு எதிர்கட்சிக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
செப் 13 அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ள வெட் சட்டமூலத்திற்க்கு 9 வர்த்தமானி அறிவித்தல் ! செப் 13 அமைச்சரவை அங்கீகாரம்  கிடைத்துள்ள வெட் சட்டமூலத்திற்க்கு 9 வர்த்தமானி அறிவித்தல் ! Reviewed by Madawala News on 10/04/2016 02:44:00 PM Rating: 5