Free Space

பள்ளிவாயலில் புகுந்து துப்பாக்கி சூடு.. 14 பேர் உயிரிழப்பு. ஷியாக்களின் விழாவில் சம்பவம்.



ஆப்கானிஸ்தானில் ஷியா பிரிவினரின்பள்ளிவாயல்  மீது பயங்கரவாதி ஒருவர்  நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக, ஆப்கன் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சித்திக் சித்திக்கி கூறியதாவது:

முகமது நபியின் பேரன் இமாம் ஹுசைனின் நினைவு தினம், புதன்கிழமை (அக்.12) அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, தலைநகர் காபூரில் உள்ள சகி மசூதியில் சிறப்புத் தொழுகைக்காக ஏராளமானோர் கூடியிருந்தனர்.

அப்போது, அவர்கள் மீது பயங்கரவாதி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொதுமக்கள் 13 பேரும், போலீஸார் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 போலீஸார் உள்பட 26 பேர் காயமடைந்தனர்.

போலீஸார் கொடுத்த பதிலடியில் அந்தப் பயங்கரவாதி உயிரிழந்தார் என்று அவர் கூறினார்.

முகர்ரம் பண்டிகையை முன்னிட்டு ஷியா பிரிவினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு சன்னி பிரிவினர் திட்டமிட்டிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, பொது இடங்களில் ஏராளமானோர் கூட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.
பள்ளிவாயலில் புகுந்து துப்பாக்கி சூடு.. 14 பேர் உயிரிழப்பு. ஷியாக்களின் விழாவில் சம்பவம். பள்ளிவாயலில் புகுந்து துப்பாக்கி சூடு.. 14 பேர் உயிரிழப்பு. ஷியாக்களின் விழாவில் சம்பவம். Reviewed by Madawala News on 10/12/2016 06:41:00 AM Rating: 5