யெமனில் இறுதி சடங்கில் பங்கேற்றவர்கள் மீது சவுதி அரேபியா குண்டு வீசியது ! 145 பேர் பலி

 

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று
அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள யெமன் நாட்டின் ஜனாதிபதி , அபேத்ரப்போ மன்சூர் ஹாதி செயல்பட்டு வருகிறார். மன்சூர் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த 2014 செப்டம்பர் மாதம் முதல் போராட்டத்தை தொடங்கினர்.

முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லாவின் ஆதரவாளர்களும், ஷியா பிரிவை சேர்ந்தவர்களுமான இந்த ஹவுத்தி படையினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதனால் யெமனின் பல்வேறு பகுதிகளில் தாக்குதலை தொடங்கிய இவர்கள், கடந்த மாதம் தலைநகர் சனாவை கைப்பற்றியதுடன், சன்னி பிரிவினரின் பகுதிகளை நோக்கி முன்னேற தொடங்கினர். அவர்கள் தலைநகர் சனா உள்ளிட்ட பல பகுதிகளை கைப்பற்றி தனி அரசாங்கம் நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி அபெத் ராபோ மன்சூர் ஹாதிக்கு ஆதரவாகவும் சவுதி அரேபிய கூட்டு படைகள் வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன. 

சமீபத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைத்த அரசின் உள்துறை மந்திரி கலால் அல்-ரவிஷானின் தந்தை மரணம் அடைந்தார். 

அவரது இறுதி சடங்கு சனாவில் அதற்காக கட்டப்பட்டுள்ள அரங்கில் நேற்று நடந்தது. அதில் 1000-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். அதை அறிந்த சவுதி அரேபியா விமானப்படை அங்கு குண்டு வீச்சு நடத்தியது. அதில் அக்கட்டிடமும் அதை சுற்றியிருந்த பகுதிகளும் இடிந்து தரைமட்டமாயின. அங்கு நிறுத்தியிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் எரிந்து தீக்கிரையாகின. இத்தாக்குதலில் 145-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இவர்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், போலீஸ் அதிகாரிகளும் பெருமளவில் அடங்குவர்.

இவர்கள் தவிர 520 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக  உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. ஏமனில் கடந்த 2014-ம்  ஆண்டில் இருந்தே உள்நாட்டு போர் தொடங்கி விட்டது. அதில் இருந்து  இதுவரை 30 லட்சம் பேர் அங்கிருந்து வெளியேறி அகதிகளாக வெளிநாடுகளில்  தஞ்சம் அடைந்துள்ளனர்.
யெமனில் இறுதி சடங்கில் பங்கேற்றவர்கள் மீது சவுதி அரேபியா குண்டு வீசியது ! 145 பேர் பலி யெமனில் இறுதி சடங்கில் பங்கேற்றவர்கள் மீது சவுதி அரேபியா குண்டு வீசியது !  145 பேர் பலி Reviewed by Madawala News on 10/09/2016 01:09:00 PM Rating: 5