14 வயது பாடசாலை மாணவி ஐயாயிரம் ரூபாவுக்கு விற்பனை.



18 வயதுக்கு குறைந்த மைனர் பாடசாலை மாணவி ஒருவரை ஐயாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான பெண் உற்பட மூவரை 21 ஆம் திகதிவரை  விளக்கமறியலில் இடுமாறு கச்கிஸ்ஸ நீதிமன்ற நீதவான் சஹாப்தீன் உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளவத்தை ரஞ்சன் வேஜெரத்னபுரயில் வாசிக்கும் செல்வியா எனப்படும் பெண் ஒருவரும் இரு ஆண்களுமே இக்குற்றத்தில் சிக்கி உள்ளனர்,

சந்தேகநபர் செல்வியாவின் வீட்டின் அருகில் வசிக்கும் 14 வயது பாடசாலை மாணவிவின் தாய் தந்தையர் தொழில் விடயமாக வெளியில் சென்றிருந்த வேளை அம்மாணவி சந்தேகநபரின் வீட்டில் தங்கியுள்ளார். இதன்போதே  ஐயாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ள நிலையில் பணம் செலுத்தி வாங்கியவரும் ( 45 வயது) , முகவருமே கைதாகியுள்ளனர்.

அச்சிறுமியை வாங்கியவர் ஹம்பாந்தோட்டை பகுதி வீட்டில் வைத்துள்ள நிலையிலேயே இவர்கள் கைதாகி உள்ளனர்.
14 வயது பாடசாலை மாணவி ஐயாயிரம் ரூபாவுக்கு விற்பனை.  14 வயது பாடசாலை மாணவி ஐயாயிரம் ரூபாவுக்கு விற்பனை. Reviewed by Madawala News on 10/17/2016 11:43:00 AM Rating: 5