Oceas

இலங்கையின் 15 ஆயிரம் ஏக்கர் காணியை சீனா­வுக்கு வழங்­கு­வ­தற்கு ஒப்பந்தம்.



(எம்.எம் மின்ஹாஜ்)

நாட்டில் பாரிய அபி­வி­ருத்தி திட்­டங்­களை முன்­னெ­டுக்கும் நோக்­குடன் 15 ஆயிரம் ஏக்கர் காணி­களை சீனா­வுக்கு வழங்­கு­வ­தற்­கான ஒப்­பந்தம் விரைவில் கைச்­சாத்­தி­டப்­படும் என நிதி இரா­ஜாங்க

அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா அபே­வர்­தன தெரி­வித்தார்.

அதே­போன்று எட்கா ஒப்­பந்தம் அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பித்த பின்னர் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­படும்.இதன்­போது மக்கள் பிர­தி­நி­தி­களின் கருத்­து­களை செவி­ம­டுத்த பின்­னரே எட்கா குறித்து இறுதி தீர்­மானம் எடுப்போம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

நிதி அமைச்சில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு இரா­ஜாங்க அமைச்சர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

அடுத்த வரு­டத்­தி­ற­கான வரவு செல­வுத்­திட்­டத்­திற்கு ஆத­ரவு வழங்­கு­வது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் கலந்­து­ரை­யா­டி­யதன் பின்னர் தீர்­மானம் எடுப்போம். நாட்­டிற்கு பாத­க­மான அம்­சங்­களை முழு­மை­யாக நீக்­குவோம். எமது கட்சி ஏற்கும் விதத்தில் பட்ஜெட் அமை­கி­றதா என்­ப­தைனை நாம் பார்க்க வேண்­டி­யுள்­ளது. இது குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் கலந்­து­ரை­யாடி பல்­வேறு யோச­னை­களை நாம் முன்­வைப்போம்.

இதே­வேளை எட்கா ஒப்­பந்தம் தொடர்பில் பாரா­ளு­மன்­றமே இறுதி தீர்­மானம் எடுக்கும். எட்கா ஒப்­பந்தம் வரைபு முதலில் அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்­கப்­படும்.அதன்­பின்னர் அமைச்­ச­ர­வையின் அங்­கீ­காரம் கிடைத்த பின்னர் பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிக்­கப்­படும். இதன்­போது மக்கள் பிர­தி­நி­தி­களின் கருத்­துக்கள் கோரப்­பட்டு , பாரா­ளு­மன்றம் அனு­மதி வழங்­கி­யதன் பின்­னரே இறுதி தீர்­மானம் எடுக்­கப்­படும்.

அத்­துடன் நாடு பாரிய அபி­வி­ருத்­தியை நோக்கி பய­ணித்து கொண்டு வரு­கின்­றது.இதன்­பி­ர­காரம் மத்­திய அதி­வேக பாதைக்­கான பணிகள் நான்கு கட்­டங்­க­ளாக பிரித்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அதே­போன்று மெட்ரோ ரயில் சேவையும் விரைவில் அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்ளோம். மேலும் அபி­வி­ருத்தி திட்­டங்கள் முன்­னெ­டுப்­ப­தற்­காக 15 ஆயிரம் ஏக்கர் நிலப்­ப­ரப்பை சீனா­வுக்கு வழங்கும் முக்­கிய ஒப்­பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும்.

அத்துடன் நாட்டின் அபிவிருத்திக்கா க கடன்தொகையும் பெறப்பட்டு வருகின்றன.ஜப்பான் அரசாங்கம் கடன் உதவி வழங்கியுள்ளது. எனவே பாரிய அபிவிருத்தி திட்டங்களை நாம் முன்னெடுப்போம் என்றார்.

இலங்கையின் 15 ஆயிரம் ஏக்கர் காணியை சீனா­வுக்கு வழங்­கு­வ­தற்கு ஒப்பந்தம். இலங்கையின் 15 ஆயிரம் ஏக்கர்  காணியை  சீனா­வுக்கு வழங்­கு­வ­தற்கு ஒப்பந்தம். Reviewed by Madawala News on 10/12/2016 10:38:00 AM Rating: 5