Ad Space Available here

வடக்கில் நிலை­கொண்­டுள்ள 150,000 இரா­ணுவம் வன்­மு­றைக்கு அடித்­தளம் இடு­கி­றது..


லண்­டனில் இரட்டை நகர் உடன்­ப­டிக்கை நிகழ்வில் விக்கி­னேஸ்­வரன்

வட மாகா­ணத்தில் 150,000 வரை­யிலான இரா­ணு­வத்­தினர் நிலை­கொண்­டுள்ளமை வன்­மு­றைக்­கான அடித்­த­ளத்தை ஏற்படுத்துகின்றது என்று குற்றஞ்சாட்­டியுள்ள வட மாகாண சபை முத­ல­மைச்சர் நீதி­ய­ரசர் சி.வி.விக்கி­னேஸ்­வரன், பொது­மக்­களின் நிலங்கள், வாழ்­வா­தா­ரங்கள், வர்த்­தகம் , வளங்கள் ஆகி­ய­வற்றை பறித்­தெ­டுத்­தி­ருப்­ப­துடன் அங்கு வாழும் வித­வைகள் மற்றும் ஏனை­ய­வர்­களின் நல்­வாழ்­வுக்கு இத்தகைய சூழல் அச்­சு­றுத்­த­லாக இருந்­து­வ­ரு­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.  

லண்­டனில் நேற்று முன்­தினம் மாலை கிங்ஸ்ரன் மாந­கர சபைக்கும் யாழ்ப்­பா­ணத்­துக்கும் இடையில் 'இரட்டை நகர' உடன்­ப­டிக்கை கைச்­சாத்­திடும் நிகழ்வில் முதன்மை உரை ஆற்­றி­ய­போது விக்­னேஸ்­வரன் இந்த குற்­றச்­சாட்டை முன்­வைத்தார். 

இந்த நிகழ்வில் பிரித்­தா­னி­யா­வுக்­கான இலங்கை தூதுவர் அமாரி விஜ­ய­வர்­தன, கிங்ஸ்ரன் நகர சபை 

கவுன்­சி­லர்கள் உட்­பட நக­ர­ச­பையின் அழைப்­பிதழ் அடிப்­ப­டையில் பெரும் எண்­ணிக்­கையில் பிரித்­தா­னியா வாழ் தமிழ் மக்­களும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

பிறிதோர் வடி­வத்தில் தொடரும் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை விமர்­சனம் செய்த முத­ல­மைச்சர் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் அனை­வ­ருக்கும் நீதி பெறு­வ­தற்க்­கான வாய்ப்பை இல்­லாமல் செய்­வ­தா­கவும் பயங்­க­ர­வாத எதிர்ப்பு மற்றும் தேசிய பாது­காப்பு என்ற சிந்­த­னைக்குள் இருந்­து­கொண்டு ஒரு ஒன்­றி­ணைந்த சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது என்றும் நிர்­வா­க­மா­னது மனி­த­நேய மற்றும் பொது­மக்கள் பாது­காப்பு சிந்­தனை ஆகி­ய­வற்றை கொண்­டி­ருக்க வேண்டும் என்றும் கூறினார். 

 எல்லா மட்­டங்­க­ளிலும் வட மாகாண சபை­யா­னது மத்­திய அர­சாங்­கத்­தினால் ஓரங்­கட்­டப்­ப­டு­கி­றது என்றும் திட்­டங்கள் மத்­தி­யினால் முடி­வு­செய்­யப்­பட்டு மாகாண சபை மீது திணிக்­கப்­ப­டு­கின்­றது என்றும் அவர் குற்­றச்­சாட்டை முன்­வைத்தார். 

வட மாகாண சபை தற்­போது மூன்று வகை­யான முத­லீட்டு மாதி­ரி­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக குறிப்­பிட்ட முத­ல­மைச்சர், அவற்றுள் முத­லா­வ­தாக மத்­திய கிழக்கை அடிப்­ப­டை­யாக கொண்ட ஒரு முத­லீட்­டாளர் ஒருவர் மூலம் வெளி­நாட்டு ஏற்­று­மதி சந்­தைக்­காக வன்­னியில் பாரிய ஒரு மரக்­கறி மற்றும் பழப்­பயிர்ச் செய்கை திட்டம் ஒன்றை ஆரம்­பித்­துள்­ள­தா­கவும், இரண்­டா­வ­தாக புலம்­பெயர் தமிழர் ஒரு­வரின் முத­லீட்டில் ஆடை தொழிற்­சாலை ஒன்று ஆரம்­பிக்­கப்­பட்டு இயங்கி வரு­வ­தா­கவும் மூன்­றா­வ­தாக வட மாகா­ணத்தில் போருக்கு பிந்­திய புன­ர­மைப்பு புனர்­நிர்­மானம் ஆகி­ய­வற்­றுக்கு தகவல் தொழில்­நுப்பம் ஊடாக பங்­க­ளிக்கும் வகையில் அமெ­ரிக்க புலம் பெயர் தமிழர் ஒரு­வரின் நிறு­வ­னத்தின் உதவியுடன் வட மாகாணத்தில் கல்வித் திட்டம் ஓன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் இந்த இரட்டை நகர உடன்படிக்கை மூலம் பல்வேறு திட்டங்களை புலம்பெயர் தமிழ் மக்களின் உதவி நடைமுறைப்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்

வடக்கில் நிலை­கொண்­டுள்ள 150,000 இரா­ணுவம் வன்­மு­றைக்கு அடித்­தளம் இடு­கி­றது.. வடக்கில் நிலை­கொண்­டுள்ள 150,000 இரா­ணுவம் வன்­மு­றைக்கு அடித்­தளம் இடு­கி­றது.. Reviewed by Madawala News on 10/20/2016 03:42:00 PM Rating: 5