1500 நாட்கள் சென்றதும் என்ன செய்யப் போகிறீர்கள் என கேட்கிறார்கள்.. சிலரின் முட்டாள் தனத்திற்கு எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.



கடந்த ஒன்றரை வருட காலமாக பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்பட்ட கரும் புள்ளிகளை போக்கினோம். அதனால் தற்போது சகல நாடுகளும் எங்களுக்கு உதவுகின்றன.

கடந்த அரசு மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள் எனும் பெயரில் ஏற்படுத்திய கரும் புள்ளிகளை புதிய அரசு கடந்த ஒன்றரை வருட காலமாக கழுவியதென்றும், அதனால் உலகில் சகல நாடுகளிலிருந்தும் இலங்கைக்கு உதவிகள் கிடைக்கப் பெறுகின்றன எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்கள் கூறினார்கள்.

கொலொன்னாவையில் நடைபெற்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சிமெந்து வழங்கும் வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றறிய போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.


அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், எமது நாட்டின் பிரதமர் 1500 நாட்களை கொண்ட வேலைதிட்டமொன்றை சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளும்போது, எதிர்க்கட்சியிலுள்;ள சிலர் ஒரு வருடமும் ஆறு மாதங்களே கடந்துள்ள நிலையில், மேலும் 1500 நாட்கள் சென்றதும் பாராளுமன்றத்தை ஒரு வருட காலத்திற்கு நீடிக்கவா போகிறீர்களென்று எம்மிடம் கேட்கின்றனர்.

 முட்டாள்தனத்திற்கு எங்களால் ஒன்றும்; செய்ய முடியாது. நாங்கள் அரசை பொறுப்பேற்ற போது முழுமையாகவே சரிந்து விழுந்திருந்த, அழிவுற்ற பொருளாதாரத்தை கொண்ட ஒரு அரசையே பொறுப்பேற்றோம். அவ்வாறு சரிந்து போன பொருளாதாரத்தை அடுத்த நாளிலிருந்து சரி செய்ய முடியாது. முதலில் கரும்புள்ளிகளை அகற்ற வேண்டும்.

அதன்பிறகே, பொருளாதாரத்தை சரியான பாதையில் இட்டுச் செல்ல முடியம். கடந்த 370 நாட்களுக்குள் அதை நாங்கள் செய்து முடித்துவிட்டோம். பிரதமர் அவர்கள் ஐரோப்பா, சீனா, இந்தியா, மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று அக்கரும்புள்ளிகளை நீக்கிவிட்டு வந்துள்ளதால், உதவிகள் வழங்க சகலரும் முன்வருகிறார்கள். இவ்வுதவிகள் கிடைக்கப் பெற்றால் அடுத்த வருடம் நடுப்பகுதியில் எரிபொருள் விலையை மேலும் குறைக்க வாய்ப்புக்கள் ஏற்படும்;.

வேலைவாய்ப்புக்கள் மேலும் அதிகரிக்கும். வீட்டு வசதிகள் மற்றும் கிராம அபிவிருத்தி ஆகியவைகள் விரைவடையும். இந்நிகழ்வுகள் நடந்தேறும் போது நாட்டு மக்கள் வயிறார உண்டு, உடுத்து  சட்டம் மற்றும் நியாயாதிக்கத்தின் கீழ் சுதந்திரமாக வாழக் கூடிய ஒரு நாடாக இலங்கை மாற்றமடையும். மாற்றம் கண்ட நாட்டினுள் இணைந்த எதிரணி துண்டு துண்டாக உடைந்து போவதை எவராலும் தடுக்க முடியாது என்பதை கூறி வைக்க விரும்புகிறேன்.
1500 நாட்கள் சென்றதும் என்ன செய்யப் போகிறீர்கள் என கேட்கிறார்கள்.. சிலரின் முட்டாள் தனத்திற்கு எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. 1500 நாட்கள் சென்றதும் என்ன செய்யப் போகிறீர்கள் என கேட்கிறார்கள்.. சிலரின் முட்டாள் தனத்திற்கு எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. Reviewed by Madawala News on 10/12/2016 02:05:00 PM Rating: 5